AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather forecast: இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

Tamil Nadu weather today : குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக நவம்பர் 10, 2026 இன்று 2 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் நவம்பர் 14, 2026 வரை பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather forecast: இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 10 Nov 2026 06:51 AM IST

சென்னை, நவம்பர் 10 : குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக நவம்பர் 10, 2026 இன்று 2 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், வருகிற நவம்பர் 15, 2026 ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு (Heavy Rain Alert) வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்த 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 10, 2026 இன்று ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி 2 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : தீபாவளி மது விற்பனை.. 2 நாட்களில் எத்தனை கோடி வருமானம் தெரியுமா? லிஸ்ட்டில் முதலில் இருக்கும் திருச்சி!

மேலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வருகிற நவம்பர் 11,2026 நாளை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நவம்பர் 12, 2026 அன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்

வருகிற நவம்பர் 13, 2026 அன்று கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், நவம்பர் 14, 2026 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், பு லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

நவம்பர் 15 அன்றும் மீண்டும் கனமழை

அதனைத் தொடர்ந்து நவம்பர் 15, 2026 அன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அரசு பேருந்துகளில் லைவ் டிராக்கிங்க் சிஸ்டம்.. பயணிகள் பாதுகாப்புக்கு அவசர உதவி பொத்தான்.. ரூ.17.99 கோடி ஒதுக்கீடு!

சென்னை வானிலை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை நவம்பர் 10, 20236 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us