நவ. 15ஆம் தேதி வரை தொடரும் மழை.. இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Tamil Nadu Rainfall Alert: இன்று (நவம்பர் 9) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 9, 2026: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று (நவம்பர் 9) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15ஆம் தேதி வரை தொடரும் மழை:
நவம்பர் 9: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டையே உலுக்கிய கோரச் சம்பவம்.. தீபாவளி திருநாளில் ஒரே நாளில் 11 பேர் படுகொலை; பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!
நவம்பர் 10: ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 11, 12: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: “பட்டாசு சத்தத்தை விட பட்டாக் கத்திகளின் சத்தமே அதிகம்!”.. தீபாவளி நள்ளிரவுக் கொலைகள்.. உதயநிதி கடும் விமர்சனம்!!
நவம்பர் 13, 14: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
நவம்பர் 15: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் (நவம்பர் 9), நாளையும் (நவம்பர் 10) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32–33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24–25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.