AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் – ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மோசடி – ராமநாதபுரத்தில் பரபரப்பு

Ramanathapuram Land Scam : ராமநாதபுரத்தில் உயிருடன் இருக்கும் 79 முதியவர் இறந்துவிட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் உருவாக்கி, அவருக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் – ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மோசடி – ராமநாதபுரத்தில் பரபரப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Nov 2026 08:02 AM IST

ராமநாதபுரம், நவம்பர் 10 : ராமநாதபுரத்தில் உயிருடன் இருக்கும 79 முதியவர் இறந்துவிட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் (Death Certificate) உருவாக்கி, அவருக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் கோதண்டபாணி. தற்போது 79 வயதாகும் இவருக்கு சொந்தமாக ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை கிராமத்தில் 6 ஏக்கர் 2 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது. இந்த நிலையில், கோதண்டபாணிக்குச் சொந்தமான நிலத்தை அவருக்குத் தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் வேறொருவரின் பெயருக்கு மாற்றி விற்பனை செய்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிக்க : போலி புத்தக ஊழல்.. அரசியல், அறிவு பலம் கொண்டவர்களின் கூட்டுச் சதி! அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்!

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி மஞ்சுளா, கோதண்டபாணி தனது தந்தை எனக் கூறி ஆவணங்கள் தயாரித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோதண்டபாணி உயிருடன் இருக்கும் நிலையிலேயே அவர் இறந்துவிட்டதாகப் கூறி இறப்பு சான்றிதழ் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் கோதண்டபாணியின் தந்தை சாத்தையா பண்டிதர், தாய் சண்முகவள்ளி மற்றும் மனைவி உட்பட பெயர்களை பயன்படுத்தி வாரிசு சான்றிதழும் தயாரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் போலியாக உருவாக்கப்பட்ட வாரிசான மஞ்சுளா மட்டுமே உயிருடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியான வாரிசு சான்றிதழ் உருவாக்கி நிலம் விற்பனை

மேற்சொன்ன போலியான ஆவணங்களை பயன்படுத்தி கோதண்டபாணிக்குச சொந்தமான நிலத்திற்கான பவர் பத்திரமானது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கொழுந்துறை வடக்குப் பகுதியை கோவிந்தராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பவர் பத்திரத்த பெற்றதாக கூறப்படும் கோவிந்தராஜ், அந்த நிலத்தை பல பேர்களுக்கு விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலா 2 ஏக்கர் வீதம் முகமது அசின் என்பவருக்கும், கீழக்கரை முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரன் ஆகியோருக்கும் நிலத்தை விற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தவெக எம்எல்ஏ-க்கள்.. முதல்வர் தலைமையில் நாளை அவசர ஆலோசனை கூட்டம்!!

இதனையடுத்து தனக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் மற்றவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக அறிந்த கோதண்டபாணி, இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்த உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் நிலப் பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் மஞ்சுளா, கோவிந்தராஜ், பாக்கியராஜ், பசுபதீஸ்வரன் மற்றும் ரமேஷ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow Us