Simple vs Ather 450: நீங்கள் சிம்பிள் ஒன் அல்லது ஏத்தர் 450? எது சிறந்த தேர்வு?
Ather 450 vs Simple One : இந்தியச் சந்தையில், ஸ்டைலான தோற்றம் மற்றும் அதற்கு இணையான செயல்திறன் கொண்ட, அதே சமயம் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற மின்சார ஸ்கூட்டர்கள் மிகக் குறைவுதான். அத்தகைய இரண்டு மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
இந்தியச் சந்தையில், ஸ்டைலான தோற்றம் மற்றும் அதற்கு இணையான செயல்திறன் கொண்ட, அதே சமயம் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற மின்சார ஸ்கூட்டர்கள் மிகக் குறைவுதான். அத்தகைய இரண்டு மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450 (Ather 450) மற்றும் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் ஆகியவை இந்திய மார்கெட்டில் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக திகழ்கின்றன. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏத்தர் 450
பெங்களூரைச் சேர்ந்த இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏத்தர்-ன் முதல் மின்சார ஸ்கூட்டர் மாடல் இதுவாகும். அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதலே, சந்தையில் இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த ஸ்கூட்டர் ஏத்தர் 450 S மற்றும் 450 X ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 450 S மாடலின் விலை ரூ.1,35,999-லிருந்து தொடங்குகிறது. 450X மாடலின் விலை ரூ.1,48,998-லிருந்து தொடங்குகிறது.
இதையும் படிக்க : எகிறும் பட்ஜெட்.. திருமண செலவை அதிகரிக்கும் காரணங்கள்.. இந்த விஷயங்களில் கவனமாக இருக்கணும்!




450S மாடலில் 121 கி.மீ மற்றும் 161 கி.மீ என இரண்டு விதமான ரேஞ்ச் தேர்வுகள் உள்ளன. அதேபோல், 450X மாடலிலும் 126 கி.மீ மற்றும் 161 கி.மீ என இரண்டு விதமான ரேஞ்ச் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவை இரண்டுமே மணிக்கு 90 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியவை. இந்த ஸ்கூட்டர்களில் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. மேலும், இதில் 17.7 செ.மீ அளவுள்ள TFT டேஷ்போர்டும் பொருத்தப்பட்டுள்ளது.
சிம்பிள் ஒன்
‘சிம்பிள் One’ என்பது சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் முதல் மாடலாகும். இந்த மின்சார ஸ்கூட்டர், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 265 கி.மீ வரை பயணிக்கக்கூடிய திறன் கொண்டது. இது மணிக்கு 115 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது மற்றும் 0 முதல் 40 கி.மீ வேகத்தை வெறும் 2.55 வினாடிகளில் எட்டிவிடும். இந்த வாகனம் 5 kW மற்றும் 6.5 kW என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.2,04,999 மற்றும் ரூ.2,44,999 முதல் தொடங்குகிறது. ‘ஏதர் 450’ மாடலைப் போன்றே இதுவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அன்றாடப் பயன்பாட்டிற்கும் மிகவும் ஏற்றதாக உள்ளது.
இதையும் படிக்க : கார்களை ஹேக் செய்ய முடியும்.. உஷார்.. ஸ்மார்ட் அம்சங்கள் எப்படி ஆபத்தாகிறது?
வாகனத்தின் விலை குறித்த கூடுதல் விவரங்களுக்கு, உங்களுக்கு அருகிலுள்ள ஷோரூமை அணுகவும். இடத்தைப் பொறுத்து விலையில் மாற்றம் இருக்கலாம். மேலும் இது இணையதளங்களில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியச் சந்தையில், ஸ்டைலான தோற்றம் மற்றும் அதற்கு இணையான செயல்திறன் கொண்ட, அதே சமயம் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற மின்சார ஸ்கூட்டர்கள் மிகக் குறைவுதான். உங்கள் தேவை, விலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு தேவையான மாடலை தேர்ந்தெடுக்கலாம்.