AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடந்த 3 மாதங்களில் 21,000 கோடி ரூபாய் கடன் – தமிழக நிதித்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 3 மாதங்களில் 21,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளோம்; இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கடனை குறைக்க முடியாது என்று தெரிவித்தார்.

கடந்த 3 மாதங்களில் 21,000 கோடி ரூபாய் கடன் – தமிழக நிதித்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்
மரிய வில்சன் - தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Aug 2026 21:33 PM IST

சென்னை, ஆகஸ்ட் 5 : தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் 5, 2026 இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. மேலும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, கல்வி, மகளிர் நலன், கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு பல முக்கியத் திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றன.

“50 ஆண்டுகள் ஆனாலும் கடனை குறைக்க முடியாது”

இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த நிதியாண்டில் தமிழக அரசு ரூ.1.22 லட்சம் கோடி கடன் வாங்க இயலும். கடன் வாங்குவதில் தவறு எதுவுமில்லை. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்திற்கு குறைவாக தான் கடன் வாங்க முடியும். மத்திய அரசின் அனுமதி இல்லாமல் கடன் வாங்க முடியாது. கடந்த 3 மாதங்களில் 21,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளோம்; இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கடனை குறைக்க முடியாது. அதேவேளையில் கடனை விட வருவாயை பெருக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க : பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா? – திமுக விமர்சனங்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

மேலும் பேசிய அவர், மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.2,26,740 கோடி, மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 27, 835 கோடி, ஒன்றிய அரசிடமிருந்து பெரும் உதவி மானியங்கள் 32921 கோடி, மத்திய வரிகளில் பங்கு 62 531 கோடி ரூபாய் என மாநிலத்தின் மொத்த வரி வருவாய் jt. 3, 50,000 கோடி என்று தெரிவித்தார்.

வருவாய் கணக்கில் மொத்த செலவினம் 4,05,802 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் கணக்கில் பற்றாக்குறை 55,775 கோடி ரூபாய் என்றும், மூலதன கணக்கில் 56,985 கோடி ரூபாயாகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்த பற்றாக்குறை 1,22,000 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் நிதித் துறை செயலாளர் கூறினார்.

 இதையும் படிக்க : சூரிய ஒளி மின் அமைப்புக்கு பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்.. பட்ஜெட்டில் வந்த சூப்பர் அறிவிப்பு!

தற்போது இருக்கும் நிதி பிரச்னையை ஒரே ஆண்டில் சரி செய்ய முடியாது. இதனை சரிசெய்ய குறைந்தது 2 ஆண்டுகள் தேவைப்படும். மேலும் மத்திய அரசிடம் இருந்தும் வர வேண்டிய நிலுவை தொகை 7,000 கோடி ரூபாயாக உள்ளது. கடன் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டுதான் இருக்கும். வரும் 50 ஆண்டுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்க்க முடியாது. கடன் வாங்குவதை தவிர்க்க முடியாது. ஆனால் நமது வருவாய் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்துதான் கடன் வாங்க முடியும்  என்றார்.

Follow Us