AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு – நாளை விசாரணை – வெளியான தகவல்

முதல்வர் விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு வருகிற ஜூன் 15, 2026 நாளை விசாரணைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 20, 2026 அன்று விசாரணை நடைபெற்றவுள்ள நிலையில், அடுத்த கட்ட விசாரணை ஜூன் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு – நாளை விசாரணை – வெளியான தகவல்
முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Jun 2026 19:26 PM IST

முதல்வர் விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு வருகிற ஜூன் 15, 2026 நாளை விசாரணைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 20, 2026 அன்று விசாரணை நடைபெற்றவுள்ள நிலையில், அடுத்த கட்ட விசாரணை ஜூன் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 24, 2026 அன்று சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் நேரம் என்பதால் இது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக சங்கீதா தாக்கல் செய்த மனுவில் ஜீவனாம்சம் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு

முந்தைய விசாரணையின் போது இரு தரப்பினரும் நீதிமன்றம் சார்பில் அனுப்பப்பட்டது. இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை கடந்த ஏப்ரல் 20, 2026 அன்று நடைபெற்றது. இருவரும் ஆஜராகாத நிலையில் இருவரும் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ஆஜராக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு ஜூன் 15, 2026 நாளை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க : 20 கோடி மோசடி: போலீசாருக்கே ‘விபூதி’ அடித்த நபர் கைது – ராயபுரம் பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

மேலும் சங்கீதா விவாகரத்து மனுவில் தனக்கு பொருளாதார ரீதியாக விஜய் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் சுமூகமாக பிரியலாம் என்ற போது விஜய் அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற நிகழ்வில் அவரது மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகள் பங்கேற்காதது பேசுபொருளானது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக விஜய் – சங்கீதா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி வருகிறது. குடும்ப காரணங்களுக்காக இருவரும் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரிடமும் விஜய்யின் தாய் ஷோபா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் இருவர் தரப்பில் இருந்தும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளஇயாகவில்லை. இதற்கிடையில் நாளை ஜூன் 15, 2026 நடைபெறும் விவாகரத்து வழக்கு விசாரணையில் இருவரும் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் ஆஜராகவுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இருவரும் இணைந்து வாழ விரும்பினால் அது குறித்து நீதிதிமன்றத்தில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : தவெகவினர் தற்குறி அல்ல.. மலையையே பிளக்கும் ஷார்ப்பான அம்புக்குறி!.. தவெகவிற்கு ஆதரவாக பேசிய ராகவா லாரன்ஸ்!

முதல்வர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22, 2026 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் நாளை இந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்பதே தவெக தொண்டர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. இதனையடுத்து நாளை நடைபெறும் விவாகரத்து வழக்கை அரசியல் ஆர்வலர்கள் மற்றும் திரையுலகினர் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow Us