AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவினரின் தொடர் பாலியல் தாக்குதல்.. தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்கும்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Nainar Nagendran Criticized TVK Govt : தமிழக வெற்றிக் கழக கட்சியை சேர்ந்தவர்களால் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமையை ஆரம்பித்தால் தடுக்காவிட்டால் தமிழ்நாடு மிகப்பெரிய தலைக்குனிவை சந்திக்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தவெகவினரின் தொடர் பாலியல் தாக்குதல்.. தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்திக்கும்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
விஜய் மீது நயினார் கடும் விமர்சனம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 13 Jun 2026 19:24 PM IST

சேலம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியான மணிகண்டன் என்பவர் பல்வேறு பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனத்தை முன்வைத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்டம், நெய்க்காரன்பட்டியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழகத்தின் ஒன்றிய நிர்வாகியான மணிகண்டன் என்பவர் கடன் வாங்கி தருவதாக கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், அவர்களை ஆபாசமான வீடியோ எடுத்து மிரட்டி உள்ளார்.

பெண்களின் பாதுகாப்பை முதல்வர் எப்படி உறுதி செய்வார்

மேலும், தனது நண்பர்களின் இச்சைக்கு பலி ஆக்கியதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களை வெறும் சதை பிண்டங்களாக மட்டுமே பாவித்து வரும் மனித மிருகங்களுக்கு தமிழக வெற்றிக் கழக கட்சியில் பொறுப்பு வழங்கி பாதுகாத்து வரும் முதல்வர் ஜோசப் விஜய், தமிழக பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார் என்ற சந்தேகம் எழுகிறது. வெளியில் உள்ள குற்றவாளிகளிடம் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கு சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை அமைத்துள்ளதாக முதல்வர் விஜய் விளம்பரம் தேடுகிறார்.

மேலும் படிக்க: கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!

தவெகவினரிடம் இருந்து பெண்களை காக்க என்ன படை வேண்டும்

ஆனால், தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை பாதுகாக்க என்ன படை அமைக்கப் போகிறார் முதல்வர் விஜய். மாற்று அரசியல் என்று கூக்குரலிட்ட தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், பெரும்பாலான குற்றங்களின் பின்னணியில் தமிழக வெற்றிக் கழகத்தினரின் முகங்களும் தினசரி செய்தித்தாள்களை நிறைத்து வருகிறது. இதனை பார்க்கும் போது கடந்த தீய சக்தியின் நீட்சி தான் தற்போதைய துரோக சக்தி என்பது உறுதியாக தெரிகிறது.

தமிழகம் மிகப்பெரிய தலைக்குனிவை சந்திக்க நேரிடும்

தவெக காரன் என்பது குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாகவே மாறி வருவது கண்டிக்கத்தக்கதாக உள்ளது. இது மட்டும் இன்றி ஆபத்தானதும் கூட. இப்படிப்பட்டவர்களை ஆரம்பித்திலேயே கிள்ளி எரிந்து விட வேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் தமிழகம் மிகப் பெரிய தலைகுனிவை சந்திக்க நேரிடும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: “தமிழகத்தில் நடப்பது நவீன மனுநீதி சோழன் அரசு” ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகார நடவடிக்கை குறித்து தவெக ஐடி விங் கருத்து!

Follow Us