AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தமிழகத்தில் நடப்பது நவீன மனுநீதி சோழன் அரசு” ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகார நடவடிக்கை குறித்து தவெக ஐடி விங் கருத்து!

TVK IT Wing : தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இரு நிர்வாகிகளால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்தக் கட்சியின் ஐடி விங் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.

“தமிழகத்தில் நடப்பது நவீன மனுநீதி சோழன் அரசு” ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகார நடவடிக்கை குறித்து தவெக ஐடி விங் கருத்து!
கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தவெக ஐடி விங் கருத்து
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 12 Jun 2026 12:53 PM IST

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இருவர் ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து தமிழக வெற்றிக்கழக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில் ஸ்ரீவைகுண்டம் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் புகார் கிடைத்த உடனேயே குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் தப்பிக்க முடியாது. ஏனென்றால் இது மக்களின் விருப்பத்திற்குரிய அரசாங்கம் ஆகும். இன்னும் வெளிப்படையாக கூறினால் நவீன மனுநீதி சோழனின் அரசு. எனவே தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த பதவியில் இருந்தாலும் தண்டனை கிடைப்பது உறுதி. அதே வேளையில் தவறு செய்யாதவர்கள் மீது எந்த பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில்

நியாயமான நீதியை வழங்க தவறி மனசாட்சியே குப்பை தொட்டியில் வீசிவிட்டு குப்பை கூழத்தில் கிடந்து இந்த பவள விழா பாப்பா நிர்வாகத்தின் அரசு இது கிடையாது. இந்த புளுகு மூட்டை இடத்தில் துளி அளவு கூட உண்மை இருக்காது என்பது தான் கசப்பான உண்மை. அப்படி இருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கொடூரமான சம்பவத்தில் இதற்குப் பின்னணியில் உள்ள சார் யார் என்று கேட்க அந்த புளுகு மூட்டை அல்லது உண்மை பெட்டகம் என்று சொல்லிக் கொள்பவர்கள் தயாராக இருக்கிறார்களா.

மேலும் படிக்க: சிங்கப்பெண்கள் படையின் முதல் வேட்டை.. சென்னையில் புகார் அளித்த 1 மணி நேரத்தில் தரமான சம்பவம்!

பொள்ளாச்சி கொடூர சம்பவத்தின் போது

பொள்ளாச்சி கொடூரத்தின் போது எங்கள் அரசு பச்சோந்தியை போல நிறம் மாறி நீதியை குழி தோண்டி புதைத்து மங்கிப்போன சக்தியாக மாறிவிடவில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தமிழக வெற்றிக்கழக அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எங்கள் அரசு மீதான மக்களின் இந்த நேர்மறையான புரிதலை கண்டு பொறாமை தாங்க முடியாமல் தீய சக்திகளும் அதில் மங்கிப்போன சக்திகளும் புகா கக்க தொடங்கியுள்ளன. அறிவு சார் மன்றத்தின் அறிக்கைகளை காணாமல் கண்களை இருக்க மூடிக்கொண்டு அந்த மங்கி போன சக்தி கத்திக் கொண்டிருக்கிறது.

வீழ்ச்சி காலம் விரைவில் நெருங்கி வருகிறது

அதிகாரத்தை இழந்ததில் இருந்து சித்தரஞ்சன் சாலை நட்பின் ஆத்திரத்தால் சிலுவை ஏற்றும் நகைச்சுவை அரசியல் மற்றும் பாட்டு அரசியல் ஆகியவற்றின் புலம்பல் சத்தங்கள் சிலுவம்பாளையத்தில் கூட அன்றாட நிகழ்வாகிவிட்டன. இவர்களின் வீழ்ச்சி காலம் மிக விரைவில் நெருங்கி வரும் என்பதில் சந்தேகமே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!

Follow Us