AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தியது என்ன? முழு விவரம் உள்ளே!

Niti Aayog Meeting: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்துக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து முத்லவர் ஜோசப் விஜய் வலியுறுத்தி உள்ளார். அத்துடன் மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்ப வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தியது என்ன? முழு விவரம் உள்ளே!
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்திய விவகாரங்கள்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 11 Jun 2026 18:56 PM IST

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று வியாழக்கிழமை ( ஜூன் 11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு மாநில முதல் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டமானது காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலத்தின் கோரிக்கைகள், குறிக்கோள்கள் ஆகியவற்றை முன் வைத்து வலியுறுத்தி பேசியிருந்தனர். இதே போல, தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தமிழகம் சார்பில் பல்வேறு குறிக்கோள்கள், கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை முன்வைத்து வலியுறுத்தி பேசினார். அவர் என்னென்ன திட்டங்கள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி உள்ளார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க: ராஜ்யசபா இடைத்தேர்தல்.. போட்டியின்றி தேர்வானார் பிரவீன் சக்கரவர்த்தி!

நீட் தேர்வு ரத்து முதல் கல்வி நிதி விடுவிப்பு கோரிக்கை வரை

  • 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
  • தமிழகத்துக்கான 2- ஆது எய்ம்ஸ் மருத்துவமனையை கோவையில் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும்.
  • இலங்கை, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்கவும், பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவும் வேண்டும்.
  • திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்.
  • பெண்கள் பாதுகாப்பு வலுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும்.
  • குலசேகரபட்டினம் விண்வெளி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக வேண்டும்.
  • நிரந்தர வெள்ள தடுப்பு கட்டமைப்புகள் அமைக்க வேண்டும்.
  • ஒகேனக்கல் 3-ஆம் கட்ட கூட்டு குடிநீர் வழங்கல் திட்டல் ரூ. 2283.40 கோடி நிதி வழங்க வேண்டும்.
  • செங்கல்பட்டு- திருச்சி ஜிஎஸ்டி சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.
  • திருச்சி- கரூர், கரூர்- கோவை சாலைகளை 6 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும்.
  • சென்னை -குமரி அதிவேக ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும்.
  • தமிழகத்துக்கான சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின கல்வி நிதி ரூ.3,284 கோடியை விடுவிக்க வேண்டும். ஆகியவற்றை வலியுறுத்தி இருந்தார்.

மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு வழங்கப்படும்

தொடர்ந்து முதல்வர் விஜய் பேசுகையில், மத்திய- மாநில உறவுகளஅ செழுமையாக இருக்க வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று தமிழ்நாடு உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளது. வெளிப்படையான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி. இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பதை குறிப்பிட்டார். மேலும், மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லை. தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே தவெக நிர்வாகி மீதுதானா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

Follow Us