AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பக்தர்களே கவனம்.. திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஆபத்தான மீன்கள்.. கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை!

Tiruchendur Murugan Temple : திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கடல் பகுதியில் திடீரென ஜெல்லி மீன்கள் தென்பட்டன. இந்த விஷ மீன்களால் தோல் அரிப்பு, தடிப்பு ஆகியவை ஏற்படும் என கடலோர பாதுகாப்பு குழுவினர் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

பக்தர்களே கவனம்.. திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஆபத்தான மீன்கள்.. கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை!
திருச்செந்தூர் கோயில் பகுதியில் திடீர் எச்சரிக்கை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 11 Jun 2026 15:17 PM IST

தமிழகத்தில் ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் எதிரே உள்ள கடலில் இறங்கி புனித நீராடிவிட்டு கோவிலுக்கு வருவது வழக்கமாகும். அதன்படி, இன்று வியாழக்கிழமை ( ஜூன் 11) ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் பகுதியில் உள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது, கோவில் கடற்கரையில் கண்ணாடி வடிவிலான ஜெல்லி மீன்கள் அதிக அளவு தென்பட தொடங்கின. இந்த மீன்கள் நீராடிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது உரசி உள்ளது. இதனால், சில பக்தர்களுக்கு உடலில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே, இது தொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கடலோர பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருச்செந்தூர் கடல் பகுதியில் பக்தர்களுக்கு எச்சரிக்கை

அந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஏராளமான ஜெல்லி மீன்கள் கடல் நீரில் மிதந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இந்த மீன் வகை மனிதர்களின் உடலில் பட்டால் திடீர் அரிப்பு மற்றும் தோல்களில் எரிச்சல் ஏற்படும். இதனால், பொதுமக்களுக்கு தேவையில்லாத அசெளகரியம் ஏற்படும். எனவே, திருச்செந்தூர் முருகன் கோயில் கடல் பகுதியில் குளிக்கும் பக்தர்கள் ஜல்லி மீன்களை கண்டால் உடனடியாக கதைக்கு திரும்பி திரும்பி வந்து விட வேண்டும்.

மேலும் படிக்க: “தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்; சிபிஐ-யின் முடிவை ஏற்கத்தான் வேண்டும்”.. ப.சிதம்பரம் அதிரடி!

கண்ணாடி துண்டு போல காணப்படும் ஜெல்லி மீன்கள்

மேலும், இதை மீறி வேறு எந்த மக்களும் திருச்செந்தூர் கடலில் குளிக்க கூடாது என்று கடலோர பாதுகாப்பு குழுவினர் ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், கடல் நீரில் ஜெல்லி மீன்களை கண்டால் உடனே கடலோர பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். ஜெல்லி மீன் என்பது சில இடங்களில் சொறி மீன் என்று அழைக்கப்படுகிறது. கண்ணாடி துண்டுகள் போல காணப்படும் இந்த மீனில் உணர் கொம்புகளில் விஷம் இருக்கும்.

ஜெல்லி மீனால் ஏற்படும் பாதிப்புகள்

மனிதர்களின் தோலை தொலைத்து உள்ளே செல்லும்போது கடுமையான எரிச்சல், தோல் தடிப்பு மற்றும் வீக்கம், உடல் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏற்கனவே, திருச்செந்தூர் பகுதியில் ஜெல்லி மீன்களால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று பக்தர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக திருச்செந்தூர் கடல் பகுதியில் நீராட வேண்டாம் என்று கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க: மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்த 19 வயது இளம்பெண்.. தாய் மற்றும் அண்ணன் சேர்ந்து ஆணவக்கொலை செய்த கொடூரம்..

Follow Us