AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தென்காசி – நெல்லை கொலைவெறி தாக்குதல்.. 6 பேர் கும்பலை தட்டி தூக்கிய தனிப்படை.. ஓட்டம்பிடித்த ரவுடிகளுக்கு உடைந்த எலும்புகள்!

Tenkasi Nellai Sickle Attacks: தென்காசி மற்றும் நெல்லையில் பொது மக்கள் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட முகமூடி கும்பலை சேர்ந்த மேலும் 6 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில், தப்பி ஓடிய போது சிலரின் கை எழும்புகள் முறிந்தன.

தென்காசி – நெல்லை கொலைவெறி தாக்குதல்.. 6 பேர் கும்பலை தட்டி தூக்கிய தனிப்படை.. ஓட்டம்பிடித்த ரவுடிகளுக்கு உடைந்த எலும்புகள்!
தென்காசி கொலைவெறி தாக்குதலில் 6 பேர் கைது
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Jun 2026 15:34 PM IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மாதா கோவில் தெருவில் கடந்த மே 29- ஆம் தேதி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பேனர் வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3 இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கிருந்த பொது மக்களை சரமாரியாக வெட்டினர். இதில், 6 பேர் பலத்த காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே மேலும் இருவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இந்த சம்பவத்தில் நெட்டூரைசே சேர்ந்த இசக்கிமுத்து மற்றும் 16 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், நெல்லை மாவட்டம், வடக்கு அரியநாயகிபுரம் அருகே உள்ள அரசங்குளம் பகுதியில் பதுங்கி இருந்த நெட்டூரை சேர்ந்த ஐயப்பனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

கொலை வெறி தாக்குதலில் 18 பேர் அதிரடி கைது

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை தேடி வந்தனர். இதில், 6 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் நெல்லை பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த சண்முக குட்டி. வேல் கார்த்திக். நந்து, சிறுகன்குறிச்சியை சேர்ந்த பேச்சிமுத்து, கோவில் குளத்தை சேர்ந்த இசக்கி ராஜா, நெட்டூரை சேர்ந்த சண்முகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், தப்பி ஓடியபோது, 5 பேருக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இந்த வழக்கில் தற்போது வரை சம்பந்தப்பட்ட சுமார் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மது போதையில் அரக்கனாக மாறிய அண்ணன்.. சென்னையில் தூங்கிக்கொண்டிருந்த தம்பி அடித்து கொலை.. பதறவைக்கும் பின்னணி!

6 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை

இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக நெல்லை மாவட்ட எஸ். பி. பிரசன்ன குமார், தென்காசி மாவட்ட எஸ்பி அசோக் குமார் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இதில், தற்போது சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பலர் ஆலங்குளம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்தனர். அவர்களை ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்திருந்தனர்.

கொலை வெறி தாக்குதலில் பலர் பலத்த காயம்

ஒருவரை கைது செய்ய முயன்ற போது அவர் போலீசாரை வெட்டியதால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். இந்த கொலை கும்பல் தாக்கியதில் நெட்டூரை சேர்ந்த ரமேஷ், அருள்மாறன், ராயப்பன், சந்தோஷ் குமார், ராம்குமார் மாடசாமி மற்றும் மானூர் அருகே உள்ள தெற்கு பட்டி கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், முபாரக் ஆகியோர் பலத்த வெட்டு காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் டெத்? போலீஸ் விசாரணைக்கு சென்ற ஓட்டுநர் உயிரிழப்பு.. எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் நடந்தது என்ன!

Follow Us