சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையில் 2500 புதிய பணியிடங்கள்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!
Singappengal Special Task Force: தமிழகத்தில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கு 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளதாக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார். சிங்கப்பெண்கள் படை தொடக்க விழாவில் முதல் அமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா இன்று செவ்வாய்க்கிழமை ( ஜூன் 9- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்து பேசியதாவது: சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படைக்கு தமிழக அரசு சார்பில் முதல் கட்டமாக ரூ.354 கோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தின் 2- ஆவது கட்டமாக இந்த படைக்கு 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக நவீன வசதிகள் உள்ள வாகனங்கள், நவீன உபகரணங்கள், நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே, பெண்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் அமைப்புகளுக்கு கூடுதல் உதவியாகவும், ஆதரவாகவும் இருக்கும் வகையில் இந்த சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை செயல்படும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை செயல்படும் விதம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முன்னதாகவே அதனை கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கையில் இந்த அதிரடிப்படை முக்கிய பங்கு வகிக்கும். களப்பணி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்னதாக தடுக்கும் நடவடிக்கை இந்த படை ஈடுபடுவதன் காரணமாக அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண்கள் வழக்கு விசாரணை மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் மேலும் அதிக கவனம் செலுத்த முடியும். பெண்களை பின்தொடர்வது, பாலியல் தொல்லை அளிப்பது, பெண்களை குறி வைத்து தொந்தரவு செய்வது.
மேலும் படிக்க: ராஜ்யசபா இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு ஏற்பு.. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!




பெண்களுக்கு எதிரான தொந்தரவை தடுக்கும் படை
பெண்கள் கடத்தல் முயற்சி, பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல், பேருந்தில் பெண்களுக்கு தொல்லை அளிப்பது, கூட்டமான இடங்களில் பெண்களுக்கு தொல்லை அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளை தடுப்பதில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதில் அடிப்படையில் சிறப்பாக செயல்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, அதில் நடவடிக்கை எடுக்க இந்தியாவிலேயே முதல் முறையாக ட்ரோன்கள் வாயிலாக போலீஸ் பேட்ரோல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பெண்களின் எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை அரசு நன்றாக புரிந்து வைத்துள்ளது. இதனை கொஞ்சம் கொஞ்சமாக அரசு செயல்படுத்தும்.
பெண்களின் மரியாதை- கண்ணியம் அரசுக்கு முக்கியமாகும்
பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியம் ஆகியவை அரசுக்கு முக்கியமாகும். தமிழக வெற்றிக்கழக அரசு மக்களுக்கான அரசு. குறைந்த நாட்களில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை செயல்படுத்துவதற்காக உழைத்த காவல்துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் முதல் வெற்றி அந்த மாநிலத்தின் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மரியாதையாக வாழ்வதில் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: 21 அதிமுக எம்எல்ஏக்களின் பதவி தப்பியது.. 4 பேர் சிக்கினர்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்!