தேர்தலில் போட்டியிட தடை: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கேவியட் மனு தாக்கல்!
AIADMK Former MLAs Filed Caveat Petition: அதிமுகவில் இருந்து விலகிய 4 எம்எல்ஏக்கள் தங்களுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் என இரு தரப்பாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். இதில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக எஸ்பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி புகார் மனு அளித்திருந்தார். இதில், 21 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார். இந்த நிலையில், மீதமுள்ள 4 எம்எல்ஏக்களான மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி சத்யபாமா, பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
4 எம்எல்ஏக்கள் மீது சிபிஐ விசாரணை கோரி மனு
அத்துடன் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிலையில், 21 எம்எல்ஏக்கள் போக மீதமுள்ள இந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கி இருப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இவர்கள் மீது, வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் சிபிஐ விசாரணை நடத்த கோரியும், எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
மேலும் படிக்க: ராஜ்யசபா இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு ஏற்பு.. விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!




உச்சநீதிமன்றத்தில் 4 முன்னாள் எம்எல்ஏக்கள் கேவியட் மனு தாக்கல்
இது தொடர்பாக தகவல் அறிந்த 4 முன்னாள் எம்எல்ஏக்களான இசக்கி சுப்பையா மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் தங்களது கருத்துக்களை கேட்காமல் எந்த விதமான உத்தரவுகளையும் பிறப்பிக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர். அதிமுகவை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் 21 எம்எல்ஏக்கள் மன்னிப்பு கடிதம் அளித்தனர்.
4 முன்னாள் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடக்கம்
இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி மற்றொரு கடிதம் அனுப்பினார். அதன்படி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அத்துடன், மீதமுள்ள 4 முன்னாள் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் 4 முன்னாள் எம்எல்க்களும் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் படிக்க: 21 அதிமுக எம்எல்ஏக்களின் பதவி தப்பியது.. 4 பேர் சிக்கினர்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்!