சிங்கப்பெண் அதிரடிப்படை – துவங்கி வைத்த முதல்வர் விஜய்
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் முதல்வர் விஜய்யால் அறிவிக்கப்பட்டது. இதற்காக பிரத்யேக சீருடையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை ஜூன் 9, 2026 இன்று முதல்வர் விஜய் துவங்கி வைத்தார்.
சென்னை, ஜூன் 9 : தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் முதல்வர் விஜய்யால் அறிவிக்கப்பட்டது. இதற்காக பிரத்யேக சீருடையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை ஜூன் 9, 2026 இன்று முதல்வர் விஜய் துவங்கி வைத்தார். மேலும் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் இலச்சினையையும் அவர் வெளியிட்டார். இந்த திட்டம் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை துவங்கி வைத்த முதல்வர் விஜய்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட துவக்க விழா ஜூன் 9, 2026 இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவல்துறையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். பின்பு நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அரசு நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்துக்கு 3வது இடம் வழங்கப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டி வந்த நிலையில் இன்று தமிழ்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிக்க : மனைவியின் ஆசை.. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 மதிப்பிலான பரிசு பொருட்கள்!
நிகழ்வில் பேசிய முதல்வர் விஜய்
Chennai | Tamil Nadu CM Vijay says, “…This programme is very close to my heart and reflects the government’s commitment to protecting every family in Tamil Nadu. This is not just an election promise. We assured the women’s safety that we would ensure the safety of our families,… https://t.co/4a2qFIlGe1 pic.twitter.com/VgMlw3RUH2
— ANI (@ANI) June 9, 2026
பின்னர் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்துக்கான அதிகராப்பூர்வ இலச்சினையை முதல்வர் விஜய் வெளியிட்டார். பின்னர் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்துக்கான வாகனங்களை அறிமுகப்படுத்திய முதல்வர் விஜய், அந்த வாகனங்களை ஓட்டிப்பார்த்து மகிழ்ந்தார். இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டமானது முதல்வர் விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தேர்தலில் போட்டியிட தடை: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கேவியட் மனு தாக்கல்!
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்டமாக 2500 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை சிறிதளவு கூட சகித்துக்கொள்ள முடியாது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கேட்டு மனம் பதறுகிறது. பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதான தண்டனை கடுமையாக இருக்கும் என்று பேசினார்.