நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முதல்வர் விஜய் – செங்கோட்டையன் சொன்ன தகவல்
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கான தேவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 9 : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 11, 2026 வியாழக்கிழமை நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் ஜூன் 11, 2026 டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 10, 2026 காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்லவிருக்கிறார். தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் குறித்து அந்தந்த துறை சார்ந்த மத்திய அமைச்சர்களுடன் விவாதிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் டெல்லியில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியை மட்டும் சந்தித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் சந்திக்காதது பேசுபொருளானது. அதற்கேற்ப இந்த முறை சந்திப்பது உறுதியாகியுள்ளது.




இதையும் படிக்க : ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் என்ன? பட்டியலை சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கான தேவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைப்பார் என்றார்.
ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை
Chennai | Tamil Nadu Minister K. A. Sengottaiyan inspected the State Emergency and Operations Centre today
He says, “We are inspecting each department based on the instructions of the Chief Minister. The officials have been instructed to expedite the work regarding caste… pic.twitter.com/ozocvEdysn
— ANI (@ANI) June 9, 2026
மேலும் பேசிய அவர், மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை மேம்படுத்துவதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது, பொதுமக்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களை விரைவாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களுக்கு தேவையான சாதிச சான்றிதழ்கள் மற்றும் பட்டா ஆவணங்களை எவ்வளவு விரைவாக வழங்க முடியும் என்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இப்பணியை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க : புதுவையில் 3 புதிய அமைச்சர்கள்.. இரவோடு இரவாக ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு..
நிர்வாகத் திறனை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். பேரிடர் மேலாண்மைக்காக மத்திய அரசு ரூ. 1,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது, பதவியேற்ற உடனேயே முதல்வர் நீண்ட கால நிர்வாகச் செயல் திட்டத்தை வகுத்து வருகிறார். முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே, அனைத்துத் துறைகளுக்கும் ஏற்ற வகையில் ஐந்து ஆண்டுத் திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கினார். விளம்பரத்தை விட நிர்வாக பணிகளுக்கே முதல்வரர் முன்னுரிமை அளித்து வருகிறார். ஊடகங்களைச் சந்திப்பதை விடச் செயல்பாட்டிலேயே முதலமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார் என்றா பேசினார்.