AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுவையில் 3 புதிய அமைச்சர்கள்.. இரவோடு இரவாக ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு..

நேற்று அமைச்சரவை விரிவாக்க கோப்புகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. கோப்புகளை பரிசீலித்த குடியரசுத் தலைவர், மூன்று புதிய அமைச்சர்களின் நியமனத்திற்கும் உடனடியாக ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து புதுவை அரசில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதால், ஆட்சிப் பணிகள் மேலும் வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவையில் 3 புதிய அமைச்சர்கள்.. இரவோடு இரவாக ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Jun 2026 10:17 AM IST

ஜூன் 9, 2026: புதுவையில் மூன்று புதிய அமைச்சர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவர்களுக்கான பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

அவருடன், பாஜகவைச் சேர்ந்த நமசிவாயம் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதன் பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது நடைபெறும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து எழுந்து வந்தது.

3 அமைச்சர்கள் – பரிந்துரை வழங்கிய முதல்வர் ரங்கசாமி:

இந்த நிலையில், ஜூன் 3ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதிய அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்கினார். அந்த பட்டியலில் காங்கிரஸைச் சேர்ந்த ராஜவேலு மற்றும் சிவக்கொழுந்து, பாஜகவைச் சேர்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் படிக்க: குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் எடுத்த இளைஞர் பரிதாப பலி.. உயிரை பரித்த குளிர்சாதன பெட்டி!

ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் திரிபுரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த காரணத்தால், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கோப்புகள் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா தாமதமானது.

ஒப்புதல் அளித்த குடியரசு தலைவர்:

இந்த சூழலில், நேற்று அமைச்சரவை விரிவாக்க கோப்புகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. கோப்புகளை பரிசீலித்த குடியரசுத் தலைவர், மூன்று புதிய அமைச்சர்களின் நியமனத்திற்கும் உடனடியாக ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து புதுவை அரசில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதால், ஆட்சிப் பணிகள் மேலும் வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் புதுவை அரசியல் வட்டாரத்தில் அமைச்சரவை பொறுப்புகள் தொடர்பாக பல்வேறு யூகங்களும் பரவி வருகின்றன. புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்றும், இதில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Follow Us