AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் எடுத்த இளைஞர் பரிதாப பலி.. உயிரை பரித்த குளிர்சாதன பெட்டி!

Man Died After Electrocuting | தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் இளைஞர் ஒருவர் குளிர்சாதன பெட்டியில் இருந்து தண்ணீர் எடுக்க முயன்றுள்ளார். அப்போது, குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் எடுத்த இளைஞர் பரிதாப பலி.. உயிரை பரித்த குளிர்சாதன பெட்டி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 09 Jun 2026 07:03 AM IST

தேனி, ஜூன் 09 : தேனி (Theni) மாவட்டம் ஆண்டிப்பட்டியில் குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை எடுக்க அவர் சென்றபோது இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் தாக்கிய பலியான இளைஞர்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, காமராஜர் நகர், 4வது நகர் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். 24 வயதான அவர், ஏற்கனவே திருமணமாகி 13 வயதில் மகள் உள்ள கனகலட்சுமி என்ற 29 வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில், மனைவி கனகலட்சுமி மற்றும் மகள் ஆகியோருடன் ஆண்டிபட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க : செல்போன் மோகத்தில் மூழ்கிய மகள்.. ஒரு நொடி கண்டித்த தந்தை.. மறு நொடியே மாணவி எடுத்த விபரீத முடிவு!

தண்ணீர் எடுக்க சென்ற நபருக்கு நிகழ்ந்த பரிதாபம்

அதாவது, நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து திருமுருகன் தண்ணீர் எடுக்க முயன்றுள்ளார். அப்போது குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் அவர் அலறி துடித்துள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கனகலட்சுமி ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது, திருமுருகன் மின்சாரம் தாக்கியபடி குனிந்த நிலையில் நின்றுக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையும் படிங்க : காங்கிரஸ் அணுகுமுறையால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி… இண்டி கூட்டணி கூட்டத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு!

இந்த நிலையில், வீட்டின் மெயின் சுவிட்சை ஆஃப் செய்துவிட்டு அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கணவரை மீட்டு ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். புது வாழ்க்கை தேடிய திருமுருகன் இளம் வயதிலேயே மின்சாரம் தாக்கி பலியானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us