ஊருக்கு போற ப்ளான் இருக்கா? வார விடுமுறைக்காக 975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு..
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 19-ஆம் தேதி 350 பேருந்துகளும், ஜூன் 20-ஆம் தேதி 365 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 17, 2026: வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகும். மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல பல்வேறு போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், பெரும்பாலானோர் பேருந்துப் போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.
வார விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள்:
தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ள நிலையில், மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்வதற்காக அவ்வப்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 19-ஆம் தேதி 350 பேருந்துகளும், ஜூன் 20-ஆம் தேதி 365 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: “வளர்த்த கடா மார்பில் பாய்கிறது!”.. சேர்த்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைப்பாரா?.. விஜயபாஸ்கருக்கு ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி!
மொத்தம் 975 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்:
அதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜூன் 19-ஆம் தேதி 55 பேருந்துகளும், ஜூன் 20-ஆம் தேதி 55 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆழம் தெரியாமல் காலைவிட்டு.. அது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை – தங்கம் தென்னரசு
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, அவர்களின் தேவைக்கேற்ப அனைத்து பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.