அரசு ஊழியர்களுக்கு அதிரடி செக்.. இனி பதவி உயர்வு- டிரான்ஸ்பருக்கு சிஎம் ஓகே சொல்லணும்.. அரசாணை வெளியீடு!
TN Govt Employees Promotion And Transfer : தமிழக அரசு துறைகளில் ஊழியர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கோப்புகளில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் ஒப்புதல் கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது .
தமிழகத்தில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கு முதல் அமைச்சர் விஜயின் ஒப்புதல் பெற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் கூறியிருப்பதாவது: அரசு செயலாளர், துறை தலைவர்கள், அகில இந்திய பணியாளர் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கூடுதல் செயலாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் இயக்குனர்கள் மற்றும் கூடுதல் பதிவாளர்கள் ஆகியோர் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பான அனைத்து கோப்புகளும் முதல் அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். இதே போல, சட்ட அலுவலர்கள் நியமனத்தில், அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர், அரசு பிளீடர், அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட உயர்நிலை பதவிகளுக்கான நியமனங்களும் முதல்வரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
துறை அமைச்சர்களின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்
இதை தவிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களுக்கான இதர சட்ட அலுவலர்களின் நியமனங்களை எரிசக்தி வழங்கல் மற்றும் சட்டத்துறை அமைச்சர் முடிவு செய்வார். மேலும், நீர் வளத்துறையில் கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற் பொறியாளர்களின் பணியிட மாறுதல் தொடர்பான கோப்புகள் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பரிசீலனை செய்வார். பொதுப்பணி துறையில் இதே நிலை அதிகாரிகளின் கோப்புகள் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் முடிவு செய்வார்.
மேலும் படிக்க: வாடிக்கையாளர் போல வந்து சைலண்ட் திருட்டு.. ஐபோனை அமுக்கி சென்ற பெண்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்!




ஒரு ஹெக்டேருக்கு மேலான நிலம். . .
ஒரு ஹெக்டருக்கு மேற்பட்ட நிலம் கையகப்படுத்தப்படும் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, சாலை, பாசன வாய்க்கால், தொழில் வழித்தடம், மின் வழித்தடம், மலிவு விலை மீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்களுக்கு முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். ஒரு ஹெக்டருக்கு மிகாத நிலம் கையகப்படுத்தப்படும் திட்டங்களுக்கு துறை அமைச்சர் மற்றும் வருவாய் அமைச்சரின் ஒப்புதல் போதுமானதாகும். முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளின் பழைய வாகனங்கள் முன்கூட்டியே பயன்பாட்டில் இருந்து நீக்குவது.
டிஜிபி நியமன கோப்புகள் ஆளுநருக்கு அனுப்ப வேண்டாம்
இது தொடர்பான கோப்புகளுக்கு தலைமை செயலாளர் ஒப்புதல் வழங்குவார். தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம், மாநில தகவல் ஆணையம், தமிழ்நாடு லோக் ஆயுக்தா, உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒம்புட்ஸ்மேன் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான கோப்புகள் ஆளுநர் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதே வேளையில், தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை டிஜிபி நியமனங்களை இனி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டியது இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: மேகதாது அணை திட்டத்துக்கு முற்றிலும் தடை.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் அதிரடி மனு!