AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு… முழு விவரம்!

Udhayanidhi Arrest Legal Sections Details : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரியவ வகையில் பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதான நிலையில் அவர் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கப்பதிவு செய்துள்ளனர் என்பன விவரம் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு… முழு விவரம்!
உதயநிதி மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 04 Aug 2026 12:46 PM IST

தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பிரபல நடிகை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குள்ளான வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தஞ்சாவூரை சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாவட்ட காவல் துறையிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் உதயநிதி ஸ்டாலினை அதிரடியாக கைது செய்தனர். அவரை, தஞ்சாவூர் அழைத்துச் சென்று விசாரிப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில், உதயநிதி மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில்,

மேலும் படிக்க: வைகை ஆற்றில் இருக்கும் மாசு விட மோசமானது உதயநிதி ஸ்டாலினின் பேச்சு – அண்ணாமலை விமர்சனம்..

  • பி. என். எஸ். பிரிவு 196- சமுதாயங்களுக்கு இடையே பகைமை அல்லது வெறுப்பை தூண்டும் வகையிலான செயல்கள் அல்லது பேச்சு.
  • பி. என். எஸ். பிரிவு 192- கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் செயல்படுதல்.
  • பி. என். எஸ். பிரிவு 352- அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதித்தல்.
  • பி. என். எஸ். பிரிவு 79- பெண்ணின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தை அல்லது சைகை அல்லது செயல் புரிதல்.
  • பி. என். எஸ். பிரிவு 296 ( பி)- பொது இடத்தில் அல்லது பொதுமக்கள் பார்க்கக்கூடிய இடத்தில் ஆபாசமான வார்த்தைகள் அல்லது செயல்கள் புரிதல்.
  • பி. என். எஸ். பிரிவு 61- குற்றச்சதி செய்தல்.
  • பி. என். எஸ். பிரிவு 351 ( 2)- கடுமையான குற்ற மிரட்டல் விடுத்தல்.
  • தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2022- பிரிவு 4- பெண்களை துன்புறுத்துதல் தொடர்பான குற்றம் புரிதல்.
  • தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000- பிரிவு 67- மின்னணு ஊடகங்களில் ஆபாசமான தகவல் அல்லது படம் அல்லது வீடியோ வெளியிடுதல் அல்லது வீடியோவை பரப்புதல்.
Laws Details

உதயநிதி மீது பதியப்பட்ட சட்டப்பிரிவுகள்

ஆகிய 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையும் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில், இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி ஸ்டாலின் அதிரடி கைது.. பெரும் பரபரப்பு!

Follow Us