இனி யுபிஐ இலவசம் இல்லை.. எம்டிஆர் கட்டணத்தை அறிமுகம் செய்ய அரசு தீவிரம்.. யார் யாருக்கு பொருந்தும்?
Merchant Discount Rate In UPI | இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது தின்சரி பண பரிவர்த்தனை தேவைகளுக்கு யுபிஐ பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், யுபிஐ-ல் வணிகர்களுக்காக எம்டிஆர் கட்டண முறையை அரசு அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகிறது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய பொதுமக்கள் மத்தியில் யுபிஐ (UPI – Unified Payment Interface) பயன்பாடு மிக பரவலாக உள்ளது. பலரும் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை யுபிஐ செயலிகள் மூலமே மேற்கொள்கின்றனர். இத்தகைய முக்கிய அம்சமாக யுபிஐ உள்ள நிலையில், யுபிஐ சேவைகளில் எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டணத்தை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில், யுபிஐ-ல் வரவுள்ள இந்த முக்கிய கட்டண முறை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யுபிஐ பண பரிவர்த்தனைக்கு எம்டிஆர் கட்டணத்தை விதிக்கும் மத்திய அரசு?
இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், யுபிஐ சேவைகளில் வணிகர்களுக்கான எம்டிஆர் கட்டணத்தை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இந்த அம்சத்தை அறிமுகம் செய்வதற்காக மத்திய அரசு ஏற்கனவே அமலில் உள்ள ஜீரோ எம்டிஆர் திருத்த சட்டத்தை ரத்து செய்ய புதிய மசோதா ஒன்றை முன்மொழிந்துள்ளது.
இதையும் படிங்க : WhatsApp : வயதை கேட்கும் வாட்ஸ்அப்.. Age Restriction அம்சத்தை அறிமுகம் செய்ய திட்டம்?




எம்டிஆர் கட்டணம் என்றால் என்ன? – எப்படி செயல்படும்?
டிஜிட்டல் மற்றும் ரியல் டைம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கிகள் வணிகர்களிடம் கட்டணம் வசூல் செய்யும். இந்த கட்டணத்திற்கு பெயர் தான் எம்டிஆர். இந்த கட்டணம் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்படாது. நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வசூல் செய்யப்படும்.
இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6எக்ஸ்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. முழு விவரம் இதோ!
இந்த கட்டண முறை யாரை அதிகம் பாதிக்கும்?
இந்த கட்டண முறையால் சாதாரண பயனர்களுக்கு எந்த வித சிக்கல்களும் வராது. மாறாக வணிகர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் முறை சிக்கலாக அமையும். அதுவும் தற்போதைய நிலவரப்படி வணிக ரீதியில் பெரிய அளவில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக இந்த கட்டண முறை அமல்படுத்தப்படும். இதன் காரணமாக சாதாரன பயனர்கள் எந்த வித கட்டணமும் இன்றி வழக்கம் போல இலவசமாக யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.