ரூ.40,000 தள்ளுபடியுடன் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா.. பிளிப்கார்ட் அசத்தல் சலுகை!
Samsung Galaxy S25 Ultra Smartphone | சாம்சங் நிறுவனம் ஒரு ஆண்டுக்கு முன்னதாக அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் தான் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது பிளிப்கார்ட் ரூ.40,000 சலுகை வழங்கியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களுக்கு (Apple iPhones) அடுத்து பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் சாம்சங்க் (Samsung). இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில், ஐபோன்களில் இருப்பதை போலவே பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். அம்சத்தில் மட்டுமன்றி, விலையிலும் ஐபோன்களுக்கு இணையாம சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இருக்கும். இந்த நிலையில் தான், சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு (Samsung Galaxy S25 Ultra Smartphone) ரூ.40,000 சலுகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் அசத்தல் சலுகை குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாம்சங் கேலஸ்கி எஸ்25 அல்டா ஸ்மார்ட்போனுக்கு அசத்தல் சலுகை
சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னதாக சாம்சங் நிறுவனம் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அப்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,29,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான், பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.86,778-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வங்கி சலுகைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை மேலும் குறைவாக வெறும் ரூ.82,778-க்கு வாங்கிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : இனி ஈஸியா படிக்கலாம்! மாணவர்களுக்கான 10 சிறந்த ஏஐ கருவிகள்