AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6எக்ஸ்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. முழு விவரம் இதோ!

OnePlus N6X Smartphone Launched In India | ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6எக்ஸ்.. அதுவும் பட்ஜெட் விலையில்.. முழு விவரம் இதோ!
ஒன்பிளஸ் என்6எக்ஸ்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Aug 2026 00:08 AM IST

இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையிலும், இந்திய பொதுமக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் ஒன்பிளஸ் (OnePlus). இந்த நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது, ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போனை (OnePlus N6X Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது என் சீரீஸை விரிவுப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் ஜூன் 30, 2026 அன்று தனது ஒன்பிளஸ் என்6 ஸ்மார்டோனை அறிமுகம் செய்த நிலையில், தற்போது அதே வரிசையில் இந்த ஒம்பிளஸ் என்எக்ஸ்6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் பெரிய பேட்டரி, அழகிய டிசைன் மற்றும் அன்றாட தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இதையும் படிங்க : டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு சர்வதேச பிடிவாரண்ட்.. காரணம் என்ன?

ஒன்பிளஸ் என்6எக்ஸ் – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் HD + LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கண் பாதுகாப்பு மோட், நேச்சுரல் கலர் மோட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 ஏபெக்ஸ் பிராசசர் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : உங்கள் வைஃபை இணைய வேகம் குறையுதா?.. சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!

இந்த ஸ்மார்ட்போனில் அட்டகாசமான 7,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தாலே 2.5 நாட்களுக்கு ஸ்மார்ட்போனை பயன்படுத்தப்படும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.20,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us