ஏஐ கணக்குகளை கண்டறிய Human Verification Badge அறிமுகம் செய்த ஃபேஸ்புக்.. சிறப்பு அம்சம் என்ன?
Human Verification Badge In Facebook | மெட்டாவின் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை வழங்கி வரும் நிலையில், தற்போது ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. தொழிலநுட்பம், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் நுழைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. சமூக ஊடகங்களை திறந்தாலே ஏஐ வீடியோக்கள், புகைப்படங்கள் தான் நிறைந்துள்ளன. இதனால், போலி எது, அசல் எது என தெரியாமல் பொதுமக்கள் குழம்புகின்றனர். இந்த நிலையில் தான், ஃபேஸ்புக் (Facebook) ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு
சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. ஏஐ புகைப்படங்கள், வீடியோக்கள் தான் சமூக ஊடகங்கள் முழுவதும் நிறைந்துள்ளன. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மனிதர்கள் தனி கணக்குகளை வைத்துள்ளதை போலவே செயற்கை நுண்ணறிவு அம்ச பங்கங்களும் வந்துவிட்டன.
இதையும் படிங்க : Swiggy, Zomato-க்கு போட்டியாக களமிறங்கும் Flipkart.. விரைவில் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது!




இதன் காரணமாக பயனர்களுக்கு பெரிய குழப்பம் ஏற்படுகிறது. இன்ஸ்டாகிராமில் வீடியோக்களின் கீழ் அது செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்டது என்றால் அதற்கான வாட்டர் மார்க் தோன்றும். ஆனால், ஃபேஸ்புக்கில் அத்தகைய அம்சம் இல்லை. இந்த நிலையில் தான், ஃபேஸ்புக் ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
மனிதர்களுக்கான பேட்ஜை அறிமுகம் செய்த ஏஐ
ஃபேஸ்புக்கில் எது மனிதர்களின் கணக்கு, எது ஏஐ கணக்கு என்பதை கண்டறிய புதிய அம்சத்தை ஃபேபுக் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ஒரு கணக்கு ஏஐ கணக்கு இல்லை என்பதை கண்டறியும் வகையில், மனிதர்களுக்கான பிரத்யேக பேட்சை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : அட்டகாசமான அம்சம்.. வெறும் ரூ.19,499.. இந்தியாவில் அறிமுகமானது iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன்!
இந்த பேட்ஜை பெறுவதற்கு பயனர்கள் செஃல்பி வீடியோ செக் செய்ய வேண்டும். அதன் மூலம் கணக்கு சோதனை செய்யப்பட்டு, இந்த பேட்ஜ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.