இனி லட்சக்கணக்கில் பணம் செலுத்தி ஐபோன் வாங்க வேண்டாம்.. லீஸ் அம்சத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்!
Need Not To Spend Lakhs To Buy iPhones | தற்போதைய சூழலில் ஒரு பேஸ் மாடல் ஐபோன் வாங்க வேண்டும் என்றாலும் கூட ரூ.50,000-க்கு மேல் செலவு செய்ய வேண்டும். ஆனால், இனி மிக குறைந்த விலையில் ஐபோன்களை பயன்படுத்து வாய்ப்பு வர உள்ளது.
என்னதான் ஏராளமான புதிய ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்கள் வந்து பல அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தாலும், ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன்களுக்கு (iPhones) எப்போதுமே பொதுமக்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றாக் ஆப்பிள் ஐபோன்கள் வைத்திருப்பவர்கள் குறித்த பார்வையே மேலாண்மையாக உள்ளது. இதன் காரணமாக பலரும் ஆப்பிள் ஐபோன் வாங்க நினைக்கின்றனர். ஆனால், அதன் விலை அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்காது.
ஆப்பிள் ஐபோன்களை லீசுக்கு விட திட்டம்
ஆப்பிள் நிறுவனத்தின் பேஸ் மாடல் ஸ்மார்ட்போனே ரூ.50,000-க்கு மேல் விற்பனை செய்யப்படும். இதுவே ப்ரோ மாடல் ஐபோன்களை வாங்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவு செய்ய வேண்டும். இதன் காரணமாக ஆப்பிள் ஐபோன்கள் பலருக்கும் எட்டா கனியாகவே உள்ளது. இந்த நிலையில் தான், ஆப்பிள் ஐபோனின் விலையை குறித்து கவலை கொள்ளாமல், ஐபோனை பயன்படுத்த அந்த நிறுவனம் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது, ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை விற்பனை செய்வதற்கு பதிலாக அவற்றை லீசுக்கு வழங்கும் புதிய முறையை அறிமுகம் செய்ய உள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி கூறுகிறது.
இதையும் படிங்க : ATM : அடிக்கடி ஏடிஎம் பயன்படுத்தும் நபர்களா நீங்கள்.. இந்த விஷயங்கள் குறித்து உஷாராக இருங்கள்!




வாடகை செலுத்தில் ஐபோன்களை பயன்படுத்தலாம்
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் முழு தொகையையும் செலுத்தி லட்சங்கள் மதிப்பு கொண்ட ஐபோன்களை வாங்க வேண்டியதில்லை. மாறாக அவர்கள் மாதம் சிறிய அளவிலான தொகையை வாடகையாக செலுத்தி ஐபோன்களை பயன்படுத்தலாம். இவ்வாறு மாதம் மாதம் வாடகை செலுத்தி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட சில காலம் முடிந்ததும் ஐபோனை மீண்டும் ஆப்பிள் நிறுவனத்திடமே ஒப்படைத்துவிட வேண்டும்.
இதையும் படிங்க : இணைய வசதியின்றி ரூ.2,000 வரை யுபிஐ பணப்பரிவர்த்தனை? NPCI புதிய வசதி.. எப்படி செயல்படும்?
புதிய மாடல் ஐபோன்களுக்கு மிக சுலபமாக மாற்றிக்கொள்ளலாம்
மாத சந்தா செலுத்தி சேவைகளை பெறுவதை போல தான் இந்த ஐபோன் லீசும் செயல்படும். வாடிக்கையாளர்கள் ஒரு ஸ்மார்ட்போனை பயன்படுத்திக்கொண்டு இருக்கும்போதே, வேறொரு ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டால் ஏற்கனவே பயன்படுத்தி வந்த ஐபோனை ஒப்படைந்துவிட்டு புதிய மாடல் ஐபோனுக்கு லீசை மாற்றிக்கொள்ளலாம். ஐபோன்களுக்கு செலுத்தும் மாத தவணையை விடவும் இதன் கட்டணம் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.