ஜியோ vs ஏர்டெல்: குறைந்த கட்டணத்தில் 30 நாள் ரீசார்ஜ் பிளான் எது?
நீங்கள் ஜியோ அல்லது ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம் பயன்படுத்துபவர் என்றால், அடுத்த முறை ரீசார்ஜ் செய்வதற்கு முன் எந்த நிறுவனம் குறைந்த கட்டணத்தில் 30 நாள் செல்லுபடியாகும் பிளானை வழங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நீங்கள் ஜியோ அல்லது ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம் பயன்படுத்துபவர் என்றால், அடுத்த முறை ரீசார்ஜ் செய்வதற்கு முன் எந்த நிறுவனம் குறைந்த கட்டணத்தில் 30 நாள் செல்லுபடியாகும் பிளானை வழங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஜியோவின் 30 நாள் பிளானின் விலை ரூ.355 ஆகும். இதில் டேட்டா, போன் கால், எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் சலுகைகள் அடங்கும். அதேபோல், ஏர்டெலின் குறைந்த கட்டணத்தில் 30 நாளுக்கான பிளானும் ரூ.355 தான். இந்தத் திட்டம் என்னென்ன சலுகைகளை வழங்குகிறது என்று பார்ப்போம்.
ஜியோ ரூ.355 பிளானின் நன்மைகள்
ரூ.355க்கு, ஜியோமொத்தம் 25 GB அதிவேக டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக, இத்திட்டத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் பிளானுக்கான மூன்று மாத சப்ஸ்கிரிப்ஷன், இலவச ஜியோ கிளவுட் சேமிப்பு வசதி, 18 மாத கூகுள் ஜெமினி புரோ பிளான், 5,000 GB கிளவுட் சேமிப்பு மற்றும் நானோ பனானா சலுகைகள் ஆகியவை அடங்கும். இத்திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க : இணைய சேவையை மந்தமாக்கும் வீட்டு உபயோக பொருட்கள்.. என்ன என்ன தெரியுமா?
ஏர்டெல் ரூ.355 பிளானின் நன்மைகள்
இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம், உங்களுக்கு மொத்தம் 25 GB அதிவேக டேட்டாவுடன், 300 SMS மற்றும் அன்லிமிட்டெட் வாய் காலிங் வசதி கிடைக்கிறது. 30 நாள் செல்லுபடியாகும் காலத்துடன், இந்நிறுவனம் இத்திட்டத்தில் ரூ.5 மதிப்பிலான டாக் டைம் வசதியையும் வழங்குகிறது. மேலும், ரூ.4,000 மதிப்பிலான 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் , நிகழ்நேர ஸ்பேம் அழைப்பு மற்றும் SMS எச்சரிக்கைகள், மற்றும் 30 நாட்களுக்கு ஒருமுறை இலவச ஹெலோ டியூனை அமைக்கும் வசதி போன்ற கூடுதல் சலுகைகளையும் இத்திட்டம் வழங்குகிறது.




இதையும் படிக்க : இனி உங்கள் எக்ஸ் Feed-ல் அதிகம் நண்பர்கள் தான் இருப்பார்கள்.. விரைவில் வரும் புதிய அம்சம்!
2 பிளானுக்கும் உள்ள வித்தியாசம்
இரு திட்டங்களையும் ஒப்பிடும்போது, எஸ்எம்எஸ்-ஐ பொறுத்தவரை மிக முக்கியமான வேறுபாடு உள்ளது. ஜியோதினசரி எஸ்எம்எஸ் வசதியை வழங்குகிறது, ஆனால் ஏர்டெல் மொத்தம் 300 எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்குகிறது. கூடுதலாக, ஜியோதிட்டத்தில் டாக் டைம் இல்லை, ஆனால் ஏர்டெல் திட்டத்தில் அது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் வழங்கப்படும் கூடுதல் சலுகைகளிலும் வேறுபாடுகள் உள்ளன. எனவே, எந்தெந்தச் சலுகைகள் உங்களுக்கு மிகவும் முக்கியமானவை என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். நம் அன்றாட பயன்பாடு, டேட்டா தேவைகள், நம் மாத பட்ஜெட் ஆகியவற்றைக் கொண்டு முடிவெடுப்பது சிறந்தது. மேலும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களையும் ஒருமுறை தெரிந்துகொண்டு அதன் சாதக பாதகங்கள் முழுமையாக அறிந்துகொண்டு தேர்ந்தெடுப்பது நல்லது.