WhatsApp : வாட்ஸ்அப் சாட்டை Back Up செய்ய பிரத்யேக கிளவுட்.. விரைவில் அறிமுகம்!
WhatsApp Soon Offer Cloud Backups for Chats | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் சாட்களை பேக் அப் செய்யும் அசத்தல் அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக அந்த நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சம்ங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் வாட்ஸ்அப் சாட்களை பேக் அப் செய்து வைக்கும் வகையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. அது என்ன அம்சம், அதன் மூலம் பயனர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாட்களுக்கு கிளவுட் பேக்கப்பை வழங்க உள்ள வாட்ஸ்அப்
விரைவில் வாட்ஸ்அப், தனது பயர்கள் தங்களது சாட் பேக்கப்களை அதன் கிளவுடில் சேமித்து வைக்கும் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே, கூகுள் டிரைவ் (Google Drive) மற்றும் ஐ கிளவுட் (iCloud) ஆகியவை உள்ள நிலையில், தற்போது பிரத்யேக கிளவுடை அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமன்றி, ஐ கிளவுடில் தங்களது பேக்கப்களை மேற்கொள்ளும் ஐபோன் பயனர்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அறிமுகம் செய்த கையோடு AI Image அம்சத்தை நீக்கம் செய்த மெட்டா.. காரணம் என்ன?




இந்த அம்சம் ஐபோன் பயனர்களுக்கு ஏன் முக்கியம்?
வாட்ஸ்அப்பின் இந்த கிளவுட் அம்சத்தை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், ஆப்பிள் பயனர்களுக்கு ஐ கிளவுடில் 5ஜிபி இலவசமாக வழங்கப்படும். வாட்ஸ்அப்பில் அதிக அளவு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் நபராக இருந்தால் இந்த 5ஜிபி ஸ்டோரேஜ் மிக விரைவில் தீர்ந்துவிடும். இத்தகைய சூழலில் அவர்கள் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்துவிட்டு பயன்படுத்தலாம். இல்லையென்றால் ஆப்பிளில் கட்டணம் செலுத்தி ஸ்டோரேஜ் பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : வாய்ஸ் மாடல்களை சோதனை செய்யும் OpenAI.. மனிதர்களை போலவே உரையாடுமாம்!
வாட்ஸ்அப்பின் இந்த புதிய திட்டத்தில் பயனர்களுக்கு ஆரம்பத்தில் இரண்டு ஜிபி ஸ்டோரேஜ் இலவசமாக வழங்கப்படும். பயனர்கள் அதனை தங்களது சாட் பேக்கப்கப்புக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். வாட்ஸ்அப்பை பிரதான செயலியாக பயன்படுத்தும் பலருக்கும் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.