AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.5,000 வரை உயர்த்திய ஒன்பிளஸ் மற்றும் ஜியோமி நிறுவனங்கள்!

OnePlus and Xiaomi Hiked Its Mobile Phones Prices | இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிக முக்கிய நிறுவனங்களாக இருக்கும் ஒன்பிளஸ் மற்றும் ஜியோமி தனது ஸ்மார்ட்போன்களின் விலைகளை ரூ.5,000 வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.5,000 வரை உயர்த்திய ஒன்பிளஸ் மற்றும் ஜியோமி நிறுவனங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 14 Jul 2026 21:45 PM IST

உலக அளவில் மெமரி சிப்களின் (Memory Chip) பற்றாக்குறை மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. மெமரி சிப்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், விலையேற்றத்தை சமாளிக்க ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களில் விலைகளை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. இதுவரை ஸ்மார்ட்போன்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது டேப்லெட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் ஜியோமி (Xiaomi) ஆகிய  நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களின் விலைகளை ரூ.5,000 வரை உயர்த்தியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விலை உயர்த்திய ஒபிளஸ் மற்றும் ஜியோமி

உலக அளவில் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் பயன்பாடு பல்வேறு துறைகளில் பரவலாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மெமரி சிப்களின் பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது ஒன்பிளஸ் மற்றும் ஜியோமி நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

இதையும் படிங்க : வாய்ஸ் மாடல்களை சோதனை செய்யும் OpenAI.. மனிதர்களை போலவே உரையாடுமாம்!

விலை உயர்த்தப்பட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்

  • 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 15 ஆர் ஸ்மார்ட்போன் ரூ.59,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்பு ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.5,000 விலை உயர்வை சந்தித்துள்ளது.
  • ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போன் ரூ.44,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்பு ரூ.42,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் ரூ.2,000 விலை உயர்வை சந்தித்துள்ளது.
  • ஒன்பிளஸ் நோர்டு சிஇ 6 ஸ்மார்ட்போன் ரூ.33,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்பு ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதாவது, இந்த இந்த ஸ்மார்ட்போன் ரூ.2,000 விலை உயர்வை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : வாய்ஸ் மாடல்களை சோதனை செய்யும் OpenAI.. மனிதர்களை போலவே உரையாடுமாம்!

விலை உயர்த்தப்பட்ட ஜியோமி ஸ்மார்ட்போன்கள்

  • ஜியோமி பேட் 8 ரூ.37,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது முன்பு ரூ.35,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.2,000 விலை உயர்வை சந்தித்துள்ளது.
  • ரெட்மி நோட் 15 எஸ்இ ஸ்மார்ட்போன் ரூ.23,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்பு ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது, இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,000 விலை உயர்வை சந்தித்துள்ளது.

Follow Us