இந்தியாவிலேயே அதிக வெப்பம்.. மதுரையில் 42.5 டிகிரி செல்சியஸ் வெயில்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை..
கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை மதுரையில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, வேலூரில் 40.4 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40.5 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடியில் 40 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.1 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 40.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
ஜூலை 14, 2026: இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை மதுரையில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்தாலும், அதன் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தச் சூழலில், வரும் நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது.
இந்தியாவிலேயே அதிக வெப்பம் – மதுரையில் 42.5 டிகிரி செல்சியஸ்:
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை மதுரையில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து, வேலூரில் 40.4 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40.5 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடியில் 40 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.1 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 40.1 டிகிரி செல்சியஸ், கரூரில் 39 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ், கடலூரில் 39.5 டிகிரி செல்சியஸ் மற்றும் தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, மீனம்பாக்கத்தில் 39.4 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
7 மாவட்டங்களில் 40 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை:
DWM DAILY WEATHER REPORT DATED 14TH JULY, 2026#Topic: Record breaking 42.5°C Recorded at Madurai Airport
==> Madurai Airport in Tamil Nadu recorded the state’s highest temperature of 42.5°Ctoday.
==> This is 5.5°C above normal and marks the highest temperature ever recorded… pic.twitter.com/jg1bdR46uF
— Delta Weatherman (Hemachander R) (@Deltarains) July 14, 2026
மேலும், மதுரையில் பதிவான 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, இயல்பைவிட 5.7 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஏழு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதேசமயம், கடலோர மாவட்டங்களான சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த வெப்பநிலை நிலைமை அடுத்த சில நாட்களும் நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தொடரும்… உள் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!
படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை:
இதற்கிடையில், தமிழகத்தில் வரும் சில நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பருவமழையின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கடலோர மாவட்டங்களில் அதிக வெப்பநிலையுடன் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் என்பதால், வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.