AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படம்? – ஹீரோ இவரா?

Varuthapadatha Valibar Sangam 2 Update : தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்த படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் பார்ட் 2 உருவாகிறதாம். இது குறித்து விவரமாக காணலாம்.

பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படம்? – ஹீரோ இவரா?
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 14 Jul 2026 20:05 PM IST

தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நடிகராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் 2013ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்றிருந்த திரைப்படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் (Varuthapadatha Valibar Sangam). இந்த படத்தை இயக்குநர் பொன்ராம் (Director Ponram) இயக்கியிருந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீ திவ்யா (Sri Divya)இணைந்து நடித்திருந்தனர். காமெடி கதைக்களத்தில் வெளியாகியிருந்த இப்படமானது சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி (DSP) மற்றும் சீமராஜா என பல்வேறு படங்கள் வெளியாகியிருக்கிறது. இறுதியாக இவரின் இயக்கத்தில் கொம்புசீவி (Kombuseevi) என்ற படமானது வெளியாகியிருந்தது.

இதில் சரத்குமார் மற்றும் ஷண்முக பாண்டியன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது இவருக்கு ஓரளவு நல்ல விமர்சனங்களை கொடுத்திருந்தது. இப்படத்திற்கு பின் இவரின் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 (Varuthapadatha Valibar Sangam 2) உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: சூப்பர் ஹீரோ கதையில் சூப்பர் ஹிட் அடித்த மாவீரன் படம் மூன்று ஆண்டுகளைக் கடந்தது

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 பட அப்டேட்:

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் இறுதியாக கொம்புசீவி என்ற படமானது வெளியானது. 2025ம் ஆண்டு வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின், தற்போது அவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படமானது உருவாக்கவுள்ளதாம்.

இதையும் படிங்க: அஜித் குமாரின் AK64 படத்தில் இணையும் பேமஸ் நடிகை.. அட அவர்தான்!

இப்படத்தில் நடிகர் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கிறாராம். பார்ட் 1 படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிக்கிறாராம். இதை ரியோ அவரின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளாராம். விரைவில் இப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படம் குறித்த இணையத்தில் எக்ஸ் பதிவு:

நடிகர் ரியோ ராஜ் சினிமாவில் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் இருந்தவருகிறார். இவர் தற்போது கதாநாயகனாக ராம் இன் லீலா என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு பின், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் புது படத்தில் இணையவுள்ளாராம். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Follow Us