AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அட்டகாசமான அம்சம்.. வெறும் ரூ.19,499.. இந்தியாவில் அறிமுகமானது iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன்!

iQOO Z11 Lite 5G Smartphone Launched In India | iQOO நிறுவனம் இந்தியாவில் தனது iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அட்டகாசமான அம்சம்.. வெறும் ரூ.19,499.. இந்தியாவில் அறிமுகமானது iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன்!
iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Jul 2026 17:23 PM IST

iQOO நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில், மிகவும் அசத்தல் அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாகியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகமாகியுள்ள இந்த iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன்

iQOO நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் அறிமுகம் செய்த iQOO Z10 Lite 5G ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து தற்போது இந்த iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமான விவோ டி5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களை போலவே அம்சங்களை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவுக்கு பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி.. எவ்வளவு தெரியுமா?

iQOO Z11 Lite 5G ஸ்மார்ட்போன் – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் HD Plus IPS டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 209 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 8.4 மிமீ அளவை கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 6,500 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 44 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ATM : அடிக்கடி ஏடிஎம் பயன்படுத்தும் நபர்களா நீங்கள்.. இந்த விஷயங்கள் குறித்து உஷாராக இருங்கள்!

பல அசத்தல் அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.19,499-க்கும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.21,499-க்கும், மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.24,499-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us