Spam Call தொல்லை கொடுக்கிறதா.. இதோ இப்படி Stop பண்ணிடலாம்.. முழு விவரம் இதோ!
How To Stop Spam Calls Completely | பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக ஸ்பேம் கால்கள் உள்ளன. இந்த நிலையில், Do Not Call Registry அம்சத்தில் பதிவு செய்வதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஸ்பேம் கால்கள் வராமல் செய்யலாம்.
ஒருவரை ஒருவர் விரைவாக தொடர்ப்புக்கொண்டு தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக தான் பலரும் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பெரும்பாலான பயனர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக ஸ்பேம் கால்கள் (Spam Calls) உள்ளன. அதாவது, முன்பு இருந்ததை போல் இல்லாமல், தற்போது ஸ்பேம் கால்கள் என திரையில் தோன்றுகிறது. அதனை பார்த்துவிட்டு அந்த போன் காலை எடுக்க வேண்டாம் என முடிவு செய்யலாம். ஆனால், தொடர்ந்து வரும் ஸ்பேம் கால்களால் பலரும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், மொபைல் போனுக்கு வரும் ஸ்பேம் கால்களை தடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்பேம் கால்களை தவிர்க்க வழி உள்ளதா?
ஸ்பேம் கால்கள் உங்களது மொபைல் எண்ணுக்கு வரவே கூடாது என நீங்கள் விரும்பினால் அதற்கு ஒரு வழி உள்ளது. அதாவது, உங்களது மொபைல் எண்ணை என்சிபிஆர் (NCPR – National Customer Preference Register) அமைப்பில் பதிவு செய்வதன் மூலம் உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஸ்பேம் கால்கள் முற்றிலும் தடுக்கப்படும். அதனை எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : ஒருமுறை சார்ஜ் செய்தால் 142 கிலோ மீட்டர் பயணம்.. சந்தையில் அறிமுகமான அட்டகாசமான மின்சார இருசக்கர வாகனம்!
Do Not Call Registry-ல் பதிவு செய்யுங்கள்
உங்கள் மொபைல் எண்ணை Do Not Call Registry-ல் பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
- உங்களது குறுஞ்செய்தி செயலியை திறந்து அதில் START என டைப் செய்து, 1909 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.
- அப்போது உங்களுக்கு Banking, Hospitality உள்ளிட்ட பல்வேறு ஆப்ஷன்கள் தோன்றும்.
- அதில் உங்களுக்கு எந்த சேவை வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள்.
- நீங்கள் அதில் பதிவு செய்த பிறகு உங்களுக்கு உறுதிப்படுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.
- அதன் பிறகு 24 மணி நேரத்தில் உங்களுக்கு அந்த Do Not Call Registry அம்சம் ஆக்டிவேட் செய்யப்படும்.
- இந்த அம்சம் மூன்றம் தரப்பில் இருந்து உங்களுக்கு வரும் வணிக ரீதியான போன் கால்களை தடுக்க வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மொவைல் ஹாட்ஸ்பாட் போட்டால் 5ஜி சேவை கட்?.. பயனர்களுக்கு ஏர்டெல் வைத்த டிவிஸ்ட்?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த முறையை பின்பற்றி உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஸ்பேம் கால்களை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



