கூகுள் பாஸ்வேர்டை மறந்துட்டிங்களா? இனி செல்ஃபி மூலம் லாகின் செய்யலாம்! – எப்படி தெரியுமா?
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒவ்வொருவருக்கும் கூகுள் கணக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நாம் கூகுள் பாஸ்வேர்டை மறந்துவிட்டால் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும். கூகுள் கணக்கில் லாகின் செய்வதை எளிதாக்க மேலும் ஒரு புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒவ்வொருவருக்கும் கூகுள் கணக்கு மிகவும் முக்கியமானது. டிஜிட்டல் உலகில் நமது முகவரியாக கூகுளின் ஜிமெயில் முகவரியைக் குறிப்பிடலாம். அந்தளவுக்கு கூகுள் கணக்கு நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால், இவ்வளவு முக்கியமான கூகுள் அக்கவுண்டின் பாஸ்வேர்டை நினைவில் கொள்வது பலருக்கும் பல சமயங்களில் சவாலாக அமைகிறது. பாஸ்வேர்டு பாதுகாப்பிற்காக கூகுள் ஏற்கனவே பல அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது. இப்போது, இவை அனைத்திற்கும் மேலாக, கூகுள் கணக்கில் லாகின் செய்வதை எளிதாக்க மேலும் ஒரு புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
செல்ஃபி வீடியோ மூலம் லாகின் செய்யலாம்!
பாஸ்வேர்டை நினைவில் கொள்வது சற்று கடினமான காரியம். ஆனால் செல்ஃபி எடுப்பது அவ்வளவு கடினமல்ல. இப்போது, கணக்கில் உள்நுழைவதை எளிதாக்க, செல்ஃபி அடிப்படையிலான உள்நுழைவு முறையை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. கணக்குகளில் லாகின் செய்வதற்கானகான ஒரு புதிய வழியாக ‘செல்ஃபி வீடியோ’ விருப்பத்தை கூகுள் கொண்டு வந்துள்ளது.
இதையும் படிக்க : Swiggy, Zomato-க்கு போட்டியாக களமிறங்கும் Flipkart.. விரைவில் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது!




பயனர்கள் தங்கள் முகத்தைப் பயன்படுத்தி எளிதாகத் தங்கள் கணக்கை அணுகவோ அல்லது மீட்டெடுக்கவோ உதவும் ‘செல்ஃபி வீடியோ’ அம்சத்தை கூகுள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. பாஸ்வேர்டு அல்லது பிற குறியீடுகள் இல்லாத சூழலிலோ அல்லது ஸ்மார்ட்போனை தொலைத்துவிட்ட நிலையிலோ, கணக்கை மீண்டும் பெறுவதற்கு இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும்.
எதிர்காலத்தில், உங்கள் பாஸ்வேர்டு மறந்துவிட்டாலோ அல்லது உங்கள் கணக்கை அணுக முடியாவிட்டாலோ, செல்ஃபி வீடியோவை பதிவு செய்யக் கோரும் ஒரு புதிய விருப்பம் உங்களுக்குக் கிடைக்கும். இந்த புதிய அம்சத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஏற்கனவே சேமிக்கப்பட்ட வீடியோவுடன் ஒப்பிட்டுப் பார்த்து பயனரை அடையாளம் கண்டு, அக்கவுணடைத் திறப்பதற்கான அனுமதியை கூகுள் வழங்கும்.
எப்படி செய்வது?
முதலில், கூகுள் அக்கவுண்ட் செட்டிங்கிற்கு சென்று Security & Sign-in என்ற ஆப்சனை கிளிக் செய்து Selfie Video என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், உங்கள் போன் கேமராவிற்கு முன் செல்ஃபி எடுக்கும் முறையில் வைத்துக்கொண்டு, உங்கள் தலையை வெவ்வேறு திசைகளில் திருப்பவும். இது உங்கள் முகத்தின் வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்து சேமிக்கும். டீப்ஃபேக் போன்ற போலி உள்நுழைவு முயற்சிகளைத் தடுக்க இது உதவும். இவ்வாறு சேமிக்கப்பட்ட வீடியோவையும், லாகின் செய்யும்போது வழங்கப்படும் வீடியோவையும் ஒப்பிட்டுப் பார்த்து லாகின் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இதையும் படிக்க : Spam Call தொல்லை கொடுக்கிறதா.. இதோ இப்படி Stop பண்ணிடலாம்.. முழு விவரம் இதோ!
வீடியோக்களைப் பதிவேற்றுவது நமது பிரைவசிக்கு அச்சுறுத்தல் என்று சிலர் கருதுகின்றனர். இருப்பினும், பயனர்களின் பிரைவசிக்கு முன்னுரிமை அளித்து இந்த புதிய வீடியோ லாகின் செய்யும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் மறைகுறியாக்கம் செய்யப்பட்டு சேமிக்கப்படும் என்றும், கணக்கு அமைப்புகளுக்குச் சென்று இந்த வீடியோவை எப்போது வேண்டுமானாலும் நீக்குவதற்கான வசதி உள்ளது என்றும் கூகிள் குறிப்பிடுகிறது.