AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸின் புதிய அம்சம் – எப்படி பயன்படுத்துவது?

தினமும் அலுவலகம் செல்பவர்களுக்கும் நீண்ட தூரப் பயணம் செய்பவர்களுக்கும் கூகுள் மேப்ஸ் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளது. எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்கும் வகையில் எரிபொருள் சிக்கன வழித்தடங்கள் என்ற அம்சத்தை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸின் புதிய அம்சம் – எப்படி பயன்படுத்துவது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Jun 2026 22:02 PM IST

எரிபொருள் விலை ரூ.100ஐத் தாண்டி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சாதாரண மக்கள் செலவு காரணமாகத் தங்கள் வாகனங்களில் பயணிக்க தயங்குகிறார்கள். ஆனாலும், தினமும் அலுவலகம் செல்பவர்களுக்கும் நீண்ட தூரப் பயணம் செய்பவர்களுக்கும் கூகுள் மேப்ஸ் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளது. எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்கும் வகையில் எரிபொருள் சிக்கன வழித்தடங்கள் (fuel-efficient routes) என்ற அம்சத்தை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக, ஒரு இடத்தைச் சென்றடைய நாம் விரைவான வழியையோ அல்லது குறுக்கு வழியையோ தேடுவோம். ஆனால், இந்த அம்சம் பயண நேரத்தையும் கருத்தில் கொண்டு, அதே சமயம் குறைந்த எரிபொருளைப் பயன்படுத்தும், அதாவது சிறந்த மைலேஜ் தரக்கூடிய வழித்தடத்தைக் கண்டறிந்து நமக்கு சொல்லும். இந்த நிலையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு இந்த அம்சம் எப்படி செயல்படும்? நம் ஸ்மார்ட்போனில் இதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க : RAM என்றால் என்ன.. ஸ்மார்ட்போன் வாங்கும்போது RAM எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

கூகுள் மேப்ஸ் எவ்வாறு எரிபொருள் சேமிப்பைக் கணக்கிடுகிறது?

இந்த வசதி ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு முக்கிய காரணிகளைப் ஆய்வு செய்கிறது. தூரம் மட்டுமல்லாமல், போக்குவரத்து நெரிசல், சாலையின் தரம், மொத்த தூரம் மற்றும் வாகனத்தின் சராசரி வேகம் ஆகியவையும் இதில் அடங்கும். அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி வாகனத்தை நிறுத்த வேண்டிய சிக்னல்கள் கொண்ட பாதைகளைத் தவிர்ப்பதன் மூலம், இது உங்கள் வாகனத்தின் எரிபொருள் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க உதவும்.

மேலும் கூகுள் மேப்ஸின் படி, என்ஜின் வகையைப் பொறுத்து எரிபொருள் சேமிப்பு ஆலோசனைகள் மாறுபடும். டீசல் கார்களைப் பொறுத்தவரை நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது சிறந்த மைலேஜை வழங்குகின்றன. எலக்ட்ரிக் கார்கள் நகரப் போக்குவரத்து நெரிசலில் மிகவும் திறமையாகச் செயல்படுகின்றன. கூகுள் மேப்ஸ் செயலியில் உங்கள் வாகன வகையைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், கூகுள் மேப்ஸ் இயல்பாகவே பெட்ரோல் வாகனத்திற்கான வழித்தடங்களைப் பரிந்துரைக்கும். எனவே, உங்கள் என்ஜின் வகையைச் சரியாக அமைப்பது முக்கியம்.

இதையும் படிக்க : எப்போதும் போனின் பிரைட்னஸை 100% அளவுக்கு வைத்திருக்கிறீர்களா? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

எப்படி பயன்படுத்துவது?

  • உங்கள் மொபைலில் இந்த அம்சத்தை தேர்ந்தெடுக்க ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே ஆகும்.
  • முதலில், உங்கள் மொபைலில் கூகுள் மேப்ஸ் செயலியைத் திறக்கவும்.
  • செயலியில் வலது மேல் மூலையில் உள்ள உங்கள் புரொஃபைல் போட்டோ பகுதியை கிளிக் செய்யவும்.
  • அங்குள்ள Settings என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்து, Navigation என்பதை கிளிக் செய்யவும்.
  • சிறிது கீழே ஸ்க்ரோல் செய்து ‘Route options என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • மேலும் ‘Prefer fuel-efficient routes என்ற ஆப்சனை செயல்படுத்தவும்.
  • அடுத்து, Engine type என்பதைக் கிளிக் செய்து, பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் அல்லது எலக்ட்ரிக் என உங்கள் வாகனத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

Follow Us