AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி பெட்ரோல் விலை குறித்த கவலை இல்லை.. வெறும் ரூ.82-க்கு அறிமுகமானது E-85 பெட்ரோல்!

E-85 Petrol Introduced In India | மேற்கு ஆசியா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், E-85 எனப்படும் பெட்ரோல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி பெட்ரோல் விலை குறித்த கவலை இல்லை.. வெறும் ரூ.82-க்கு அறிமுகமானது E-85 பெட்ரோல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Jun 2026 16:11 PM IST

மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை (Crude Oil Price) கடும் உயர்வை சந்தித்துள்ளது. அதன் காரணமாக உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ள நிலையில், அவற்றின் விலை உயர்வு சாமானியர்களின் மாதாந்திர பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தான், இந்தியாவில் விலை குறைவான E-85 பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பெட்ரோலை விட லிட்டருக்கு ரூ.20 குறைவாக கிடைக்கிறது. இந்த நிலையில், குறைந்த விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த E-85 பெட்ரோல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது ஏ-85 பெட்ரோல்

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, E-85 எனப்படும் 85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை விநியோகம் செய்யும் முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் விநியோகம் செய்யப்படும் E-85 பெட்ரோல் ரூ.82-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த E-85 பெட்ரோல் வெறும் ரூ.82-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இந்த இரண்டு பெட்ரோலுக்கும் ரூ.25 வித்தியாசம் உள்ளது.

இதையும் படிங்க : இந்த ஆண்டு பிஎஃப் வட்டி தாமதமாக வரவு வைக்கப்படுமா?.. வெளியான முக்கிய தகவல்!

E-85 பெட்ரோல் பாதுகாப்பானதா?

சாதாரன பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. இதுவே இந்த E-85 பெட்ரோலில் 85 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. இந்த எத்தனால் கரும்பு பாகு கழிவு, சோளம், அரிசி, சேதமடைந்த தானியங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இயற்கையான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதன் காரணமாக இந்த எத்தனால் பெட்ரோல் சுற்றுசூழலுக்கும் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது.

இதையும் படிங்க : இந்தியப் பொருளாதாரத்திற்குப் புதிய உத்வேகம்: 2025-26ல் 7.7% ஜிடிபி வளர்ச்சி

விலைவாசி உள்ளிட்ட காரணங்களால் எத்தனால் பெட்ரோலுக்கான தேவை ஏற்பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்களும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன. ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனம் E-85 பெட்ரோலில் இயங்க கூடிய பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இதேபோல, மாருதி சுசுகி நிறுவனமும் E-85 பெட்ரோலில் இயங்க கூடிய வேகன் ஆர் காரை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us