AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7% வரை வட்டி தரும் எஸ்பிஐ.. சிறப்பு திட்டமும் உள்ளது!

SBI Provides Up To 7 Percentage Interest Rate For Fixed Deposit | இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், எஸ்பிஐ வங்கி தனது திட்டங்களுக்கு 7 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7% வரை வட்டி தரும் எஸ்பிஐ.. சிறப்பு திட்டமும் உள்ளது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Jun 2026 19:10 PM IST

சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்து தங்களது பணத்தை பல மடங்கு உயர்த்த வேண்டும் அல்லது பொருளாதார பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சிறந்த திட்டமாக நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) உள்ளது. இந்த திட்டம் பாதுகாப்பாகவும் அதே சமயம் நல்ல லாபத்தையும் கொடுப்பதால் பலரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நல்ல பலனை பெற வேண்டும் என்றால் அதிக வட்டியுள்ள திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இந்த நிலையில், 7 சதவீதம் வரை வட்டி தரக்கூடிய நிலையான வைப்பு நிதி திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

7 சதவீதம் வரை வட்டி தரக்கூடிய நிலையான வைப்பு நிதி திட்டங்கள்

எஸ்பிஐ வங்கி தனது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 7 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், எந்த எந்த திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.3 கோடிக்கும் குறைவான டெபாசிட்

ரூ.3 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் செய்யும்போது பொது வாடிக்கையாளர்களுக்கு 3.05 சதவீதம் முதல் 6.45 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 3.05 சதவீதம் முதல் 6.95 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஒரு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் பணத்தை எடுத்தால் என்ன ஆகும்.. வருமான வரி விதிகள் கூறுவது இதுதான்!

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கான திட்டம்

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட  பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 6.40 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 6.90 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : பணத்தை பல மடங்கு உயர்த்த இந்த சில ஃபார்முலாக்களை பயன்படுத்துங்கள்!

அம்ரித் விருஷ்டி சிறப்பு திட்டம்

அம்ரித் விருஷ்டி என்ற சிறப்பு திட்டத்தையும் எஸ்பிஐ வங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கான கால அளவு 444 நாட்கள் ஆகும். இந்த திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 6.45 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 6.95 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

நிலையான வைப்பு நிதி திட்டத்தை பொருத்தவரை அதிக வட்டி கொண்ட திட்டங்களில் முதலீடு செய்வது அதிக லாபத்தை பெற்றுத்தரும். எனவே இந்த திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.

Follow Us