ஒரு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் பணத்தை எடுத்தால் என்ன ஆகும்.. வருமான வரி விதிகள் கூறுவது இதுதான்!
Income Tax Rules For Money Withdrawing | வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி அதனை தேவைப்படும்போது பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக உள்ளது. ஆனால், வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக உள்ளது.
வீட்டில் பணம் வைத்திருப்பது பாதுகாப்பானது இல்லை என்பதால் பலரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வங்கி கணக்கில் சேமித்து வைப்பர். பணம் வரும்போதெல்லாம் வங்கி கணக்கில் பணத்தை போட்டால் அது பாதுகாப்பாக இருக்கும், எப்போது வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைத்து டெபாசிட் செய்கின்றனர். வங்கி கணக்கில் பணத்தை போடுவது பாதுகாப்பை தரும், ஆனால் பணத்தை எடுப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை மீறும் பட்சத்தில் நீங்கள் வருமான வரித்துறையின் விசாரணை வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து ஒரே முறையாக ரூ.10 லட்சம் பணத்தை எடுக்கிறார் என்றால் அவர் வருமான வரித்துறையின் விசாரணை வளையத்தில் வைத்து கண்காணிக்கப்படுவார். அது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தால் வருமான வரித்துறை கண்காணிக்கும்
கருப்பு பணம், சட்டவிரோத பண பரிவர்த்தனைகள், வரி ஏய்ப்பு ஆகியவற்றை தடுக்க வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் தனிநபர்களின் பண பரிவர்த்தனையை கண்காணிக்கும் பணிகளையும் வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு வருமான வரித்துறை கண்காணிப்புக்காக வங்கிகளும் உதவி செய்கின்றன. உதாரணமாக நீங்கள் வங்கியில் இருந்து அதிக அளவிலான பணத்தை டெபாசிட் அல்லது வித்ட்ரா செய்தால் அது தொடர்பான தகவலை வங்கிகள் வருமான வரித்துறைக்கும் தெரிவிக்கும். இதன் மூலம் வருமான வரித்துறை மிக எளிதாக உங்களிடம் நெருங்கும்.
இதையும் படிங்க : வருமான வரி செலுத்துவதில் இவ்வளவு பலன்கள் உள்ளதா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!




ஒருவர் ஒரு வருடத்தில் எவ்வளவு பணம் எடுக்கலாம்?
வங்கிகள் நிதியாண்டை மையப்படுத்தி பணியாற்றும். இதன் காரணமாக ஒருவர் ஒரு நிதியாண்டில் எவ்வளவு பணத்தை எடுக்கிறார் என்பதை வருமான வரித்துறை கண்காணிக்கும். ஒருவர் ஒரு நிதியாண்டில் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் வரை பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அதற்கு எந்த விதமான சிக்கலும் வராது. ரூ.10 லட்சத்திற்கு மேலும் பணத்தை எடுக்கலாம். ஆனால், அவ்வாறு எடுக்கும்போது அந்த நபர் விசாரணை வளையத்தின் கீழ் வருவார். அப்போது அந்த பணம் எங்கிருந்து வந்தது, எப்படி பெறப்பட்டது என்பது உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க : புதிய ஆதார் செயலி அறிமுகம்.. பதிவிறக்கம் செய்து லாக் இன் செய்வது எப்படி?
ஒருவேளை பணத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லை என்றால் வருமான வரித்துறையின் நடவடிக்கை பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.