AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற அசத்தல் திட்டங்கள்.. முழு விவரம் இதோ!

Better Investment Schemes For Children's Future | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் சில முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற அசத்தல் திட்டங்கள்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Jun 2026 14:47 PM IST

பாதுகாப்பான எதிர்காலத்தை பெற வேண்டும் என்றால் நிதி பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே தான் பலரும் சேமிப்பு (Saving) அல்லது முதலீட்டு (Investment) திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். நிதி பாதுகாப்பு அனைத்து தரப்பினருக்கும் மிகவும் முக்கியமானதாக உள்ளது. பெரியவர்கள் மட்டுமன்றி, சிறியவர்களுக்கும் அவர்களது எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்க நிதி பாதுகாப்பு முக்கியமானதாக உள்ளது. இந்த நிலையில், பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றும் அரசின் சில முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் திட்டங்கள்

அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பிள்ளைகளில் எதிர்காலத்தை பாதுகாக்க கூடிய சில முக்கிய திட்டங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

தேசிய சேமிப்பு சான்றிதழ்

அஞ்சலங்கள் மூலம் அரசு வழங்கும் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாக இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ் (NCS – National Saving Certificate) திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் தனி நபராகவும், இணைந்தும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒருவர் தனக்காகவோ அல்லது தனது குழந்தைக்காக முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயரில் இந்த கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்திற்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : சங்கீதாவின் 52வது ஆண்டு விழா விற்பனை – அள்ளிக்கொடுக்கப்படும் ஆஃபர்ஸ்!

சுகன்யா சம்ரித்தி யோஜனா

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana) பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டமாக இது உள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இந்த திட்டத்தில் குழந்தைகளின் சார்பாக அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் முதலீடு செய்யலாம். குழந்தைகளின் சிறு வயதில் இந்த திட்டத்தில் முதலீட்டை தொடங்கும் பட்சத்தில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடையும்போது, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவர்களின் பெயர்களுக்கு கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : பிபிஎஃப் திட்டத்தில் வட்டியை முறையாக பெற இது முக்கியம்.. முழு விவரம் இதோ!

பொது வருங்கால வைப்பு நிதி

அரசால் வழங்கப்படும் ரிஸ்க் இல்லாத முதலீடாக இந்த பொது வருங்கால வைப்பு நிதி (PPF – Public Provident Fund) திட்டம் உள்ளது. இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் கணக்கு தொடங்க அனுமதி வழங்கப்படும் நிலையில், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்களது பிள்ளைகளின் மீது கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

Follow Us