8.50% வரை வட்டி.. FD திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
Small Finance Banks FD Interest Rate | ஏராளமான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கும் பெரும்பாலான குடும்பங்கள் அல்லது தனிநபர்களின் முதன்மை தேர்வாக இருப்பது நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டம் தான். இந்த திட்டம் பாதுகாப்பான அம்சங்களுடன் சிறந்த லாபத்தையும் வழங்குகிறது என்பதால் பலருக்கு இது சிறந்த தேர்வாக தோன்றுகிறது. பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரவலாக உள்ள இந்த திட்டத்திற்கு எந்த எந்த வங்கிகள் அதிக வட்டி தருகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எஃப்டி திட்டங்கள் – அதிக வட்டி தரும் வங்கிகள்
நிலையான வைப்பு நிதி திட்டங்களை பொருத்தவரை வங்கிகளை விடவும் ஸ்மால் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் அதிக வட்டியை வழங்குகின்றன.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
3 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட திட்டத்திற்கு இந்த வங்கி 7.50 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே, 5 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட திட்டத்திற்கு 7.77 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.




சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
1 மற்றும் 3 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட திட்டங்களுக்கு இந்த வங்கி 7.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : பிஎஃப் கணக்கில் பெயர், பிறந்த தேதி தவறாக உள்ளதா?.. உங்களால் பணத்தை எடுக்க முடியாது!
உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
இந்த வங்கி 1 ஆண்டு திட்டத்திற்கு 7.25 சதவீதம் வட்டியும், 3 மற்றும் 5 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட திட்டங்களுக்கு 7.20 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி
நிலையான வைப்பு நிதி திட்டத்தை பொருத்தவரை சாதாரண குடிமக்களை விடவும், மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.
இஎஸ்ஏஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
இந்த வங்கி நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகபட்சமாக 8.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் – ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு விலை உயர்வு
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
இந்த வங்கி மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகபட்சமாக 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
பல ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு சாதாரண குடிமக்களுக்கான வைப்பி நிதி திட்டங்களை விட 0.50 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வட்டி வழங்குகின்றன.