AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எத்தனால் கலந்த பெட்ரோல் விரைவில் அறிமுகம்?.. ரூ.20 வரை குறையும் பெட்ரோல் விலை?

Petrol Price Will Decrease | மேற்கு ஆசியா போரால் கச்சா எண்ணெய் விலை கடும் உச்சத்தில் உள்ள நிலையில், எத்தனால் கலந்த பெட்ரோல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இதன் காரணமாக பெட்ரோல் விலை ரூ.20 வரை குறையும் என்றும் கூறப்படுகிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல் விரைவில் அறிமுகம்?.. ரூ.20 வரை குறையும் பெட்ரோல் விலை?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 May 2026 15:18 PM IST

மேற்கு ஆசிய போரில் (West Asia War) ஹோர்முஸ் நீரிணை (Straight Of Hormuz) மூடப்பட்டுள்ளதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மிக கடுமையான பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றன. இது பொதுமக்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் தான் இந்தியாவில், எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், இதன் காரணமாகம் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.20 வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஹோர்முஸ் சிக்கலால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பிப்ரவரி 28, 2026 அன்று இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் உருவானது. இந்த போரின் ஒரு பகுதியாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது. பல்வேறு உலக நாடுகள் இந்த நீரிணையை வழியாக கப்பல்கள் மூலம் தங்களது கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து வந்த நிலையில், ஈரானின் நடவடிக்கையால் கப்பல்கள் கடந்து செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டன. இதன் காரணமாக உலக நாடுகள் கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றன.

இதையும் படிங்க : விரைவில் வாட்ஸ்அப்பில் இபிஎஃப்ஓ சேவை.. பயன்படுத்துவது எப்படி?

தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை

கச்சா எண்ணெய் கடும் விலை உயர்வில் இருந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான், மே மாதத்தில் பலமுறை பெட்ரோல் மற்றும் டீடல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட செலவுகள் அதிகரிக்கும் அச்சம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தான், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இபிஎஃப்ஓ 3.0-ல் கவணிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

எத்தனால் கலந்த பெட்ரோல் விரைவில அறிமுகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் எத்தனால் ப்ளெண்டிங் அறிமுகம் செய்யப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் பெட்ரோல் விலை ரூ.20 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை எத்தனால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சி.கே.ஜெயின் கூறியுள்ளார் என்பது குறிப்பிஃப்டத்தக்கது.

Follow Us