பிஎஃப் கணக்கில் பணம் எடுக்க போறீங்களா?.. இந்த 5 அப்டேட்டுகளை செய்ய வேண்டியு கட்டாயம்!
Five Mandatory Updates For PF Account | பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், பிஎஃப் பணம் எடுப்பதற்கு முன்னதாக சில முக்கிய அப்டேட்டுகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அவை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான முக்கிய அம்சமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) உள்ளது. இந்த அமைச்சக்கத்தில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது. ஆனால், ஊழியர்கள் அவ்வாறு பணத்தை எடுத்துக்க வேண்டும் என்றால் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் சில முக்கிய அப்டேட்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. அது என்ன என்ன அப்டேட் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய அப்டேட்டுகள்
பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் இந்த ஐந்து அப்டேட்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது.
யுஏஎன் எண் ஆக்டிவேட் செய்யப்பட வேண்டும்
ஊழியர்கள் யுபிஐ அடிப்படையிலான பிஎஃப் பண பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக தங்களுடைய யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஒருவேளை யுஏஎன் எண் ஏற்கனவே ஆக்டிவே செய்யப்பட்டுள்ளது என்றால் அது செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : பிஎஃப் கணக்கு லாக் ஆகிவிட்டதா?.. கவலை வேண்டாம்.. இதை செய்தால் மட்டும் போதும்!
யுஏஎன் – ஆதார் இணைப்பு
ஊழியர்கள் தங்களது யுஏஎன் எண்ணை, ஆதார் உடன் இணைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. அதுமட்டுமன்றி, பிஎஃப் கணக்கில் உள்ளா முக்கிய விவரங்களாக பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவை ஆதார் கார்டில் இருப்பதை போலவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.
பெயர் சரியாக இருக்க வேண்டும்
யுபிஐ மூலம் பிஎஃப் பணம் நேரடியாக ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுவதால், ஊழியர் வருங்கால வைப்பு நிதி இணையதளத்தில் உள்ள வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி குறியீடு மற்றும் கணக்கு வைத்திருக்கும் நபரின் பெயர் ஆகியவை ஆதாரில் உள்ளதை போலவே இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : 2026 June Changes : கார் விலை உயர்வு முதல் கேஸ் சிலிண்டர் வரை.. 2026 ஜூன் மாதம் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்!
மொபைல் எண்
ஆதார் கார்டு மற்றும் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஊழியர்களின் மொபைல் எண் பயன்பாட்டில் இருக்க வேண்டும். ஏனெனில் யுபிஐ பரிமாற்றங்களின் போது ஓடிபி வரும். இதன் காரணமாக முக்கிய ஆவணங்களுக்கு ஒரே எண்ணை கொடுப்பது சிறந்ததாக இருக்கும்.
இ நாமினேஷன்கள்
பழைய பிஎஃப் கணக்குகள் இருந்தால் அவற்றை தற்போதைய யுஏன் எண் உடன் இணைத்திடுங்கள். இது தவிர, உங்கள் இ நாமினேஷன் விவரங்கள் அனைத்தும் அப்டேட்டாக உள்ளதாக என்பதை அவ்வப்போது உறுதி செய்துக்கொள்ளுங்கள்.