AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026 June Changes : கார் விலை உயர்வு முதல் கேஸ் சிலிண்டர் வரை.. 2026 ஜூன் மாதம் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்!

New Changes From June 2026 | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். தற்போது மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், விரைவில் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. அப்போது அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026 June Changes : கார் விலை உயர்வு முதல் கேஸ் சிலிண்டர் வரை.. 2026 ஜூன் மாதம் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 May 2026 17:04 PM IST

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் பெட்ரோல், டீசல் விலை மாற்றம், கேஸ் சிலிண்டர் விலை மாற்றம், ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) ஆகியவை குறித்து சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். 2026 மே மாதம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையி, 2026 ஜூன் மாதத்தில் என்ன என்ன முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026 ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

2026 ஜூன் மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்த்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : விரைவான டெலிவரி – ஃபிளிப்கார்ட்டுடன் கைகோர்த்த இந்தியா போஸ்ட் – என்ன ஸ்பெஷல்?

பெட்ரோல், டீசல் விலை

மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியாவில் 10 நாட்களில் மட்டும் நான்கு முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை சிக்கல் தீரவில்லை என்றால் 2026 ஜூன் மாத தொடக்கத்தில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மாருதி கார்களில் விலை உயர்வு

இந்தியாவில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி தனது கார்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு 2026 ஜூன் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.

இதையும் படிங்க : வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படுமா? 100% உறுதியாக சொல்லும் ஏஐ

ஆதார் அப்டேட் கால அவகாசம்

ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய 2026, ஜூன் கடைசியாக இருந்தது. இந்த நிலையில் தான் ஜூன் 14, 2026 வரை என மேலும் ஒரு ஆண்டு கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.

Follow Us