விரைவான டெலிவரி – ஃபிளிப்கார்ட்டுடன் கைகோர்த்த இந்தியா போஸ்ட் – என்ன ஸ்பெஷல்?
Fast Delivery Service : நாடு முழுவதும் பார்சல் சேவையை மேலும் வேகமாகவும் திறமையாகவும் வழங்கும் நோக்கில் இந்திய தபால் துறையும் ஃபிளிப்கார்ட் நிறுவனமும் இணைந்து செயல்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் 2 நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளது. மேலும் கேஷ் ஆன் டெலிவரி போன்ற பல ஆப்சன்களும் கிடைக்கும்
இந்தியாவின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ஃபிளிப்கார்ட் இந்திய தபால் துறையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன் படி நாடு முழுவதும் பார்சல் சேவையை மேலும் வேகமாகவும் திறமையாகவும் வழங்கும் நோக்கில் இந்திய தபால் துறையும் ஃபிளிப்கார்ட் நிறுவனமும் இணைந்து செயல்படும். இதன் மூலம் நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கும் விரைவான பார்சல் சேவையை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா போஸ்ட் சேவை முன்பை காட்டிலும் வேகமாகவும் தடையின்றியும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபிளிப்கார்ட்டுடன் கைகோர்த்த இந்தியா போஸ்ட்
இந்த ஒப்பந்தம் குறித்து தகவல் வெளியிட்ட தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தபால் துறை, இந்திய தபால் துறையின் பரந்த விநியோக நெட்வொர்க்கில், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இகாமர்ஸ் அனுபவங்களுடன் சேர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மற்றும் வேகமான சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா முழுவதும் ஃபிளிப்கார்ட், பார்சல்களை கடைக்கோடி கிராமங்கள் வரை கொண்டு சேர்க்கும் சேவையை இந்திய தபால் துறை மேற்கொள்ளும். இதற்காக இந்திய தபால் துறையின் 1.6 லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்களின் சேவை பயன்படுத்தப்படவிருக்கிறது.
இதையும் படிக்க : கடன் இல்லாமல் வாழ வேண்டுமா?.. இந்த முக்கியமான டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!




இந்த சேவை மாநகரங்கள், நகராட்சிகள், கிராமப்புறங்கள் மற்றும் இதுவரை டெலிவரி வசதிகளே கிடைக்காத பகுதிகள் வரை இந்த சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது. குறிப்பாக சமீபகாலமாக கிராமப்புறங்களிலும் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வரும் நிலையில், அதன் அடுத்த கட்டமாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் முன் கூட்டியே பணம் செலுத்துதள், கேஷ் ஆன் டெலிவரி வசதி, ஓடிபி மூலம் பாதுகாப்பான டெலிவரி, நமக்கு வரும் பார்சல்களை டிராக்கிங் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் இகாமர்ஸ் துறைக்கான லாஜிஸ்டிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க : சம்பளம் வந்ததும் பணம் காலியாகிவிடுகிறதா?.. இனி உங்கள் நிதி மேலாண்மையை சாட்ஜிபிடி பார்த்துக்கொள்ளும்!
இதற்கிடையில், வால்மார்ட் நிறுவனத்தின் தலைவர் ஜான் ஃபர்னர், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 13 நிமிட டெலிவரி சேவையை பாராட்டியுள்ளார். குறிப்பாக ஃபிளிப்கார்ட் மினிட்ஸ் சேவை மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், இந்தியாவில் புதுமையான டெலிவரி முறை உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது ஃபிளிப்கார்ட் இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட சிறிய அமைப்புகள் மூலம் விரைவான டெலிவரி சேவையை வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் இதை 1,200 சென்டர்களாக விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.