ஜூன் மாதத்தில் ஆர்பிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. வீடு, வாகன கடன் வட்டி உயரும்?
RBI Likely To Hike Repo Rate By 50 Basis Pints | இந்திய ரிசர்வ் வங்கி தற்போதைய நிலவரப்படி ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாக வைத்துள்ளது. இந்த நிலையில், அது ஜூன் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் 50 புள்ளிகள் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக உலக நாடுகள் கடும் சவால்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவும் சில கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு (Crude Oil Price Hike) காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநாட்ட இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் வெளியிட்டிருக்க கூடிய அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பை தக்கவைக்க இந்திய ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முக்கிய முடிவு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
மேற்கு ஆசியா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடும் உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க டாலர் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. அதன் விளைவாக இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், விரைவில் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.100 வரை செல்லக்கூடும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் தான், இந்திய ரூபாயின் மதிப்பை தக்கவைக்க 2026, ஜூன் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, குறைந்தது 50 புள்ளிகளாவது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மே 23 முதல் மே 28 வரை.. மொத்தம் 6 நாட்கள் வங்கிகள் செயல்படாது?
6.50% -ல் இருந்து 5.25% ஆக குறைந்த ரெப்போ வட்டி விகிதம்
2024 ஆம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாக வைத்திருந்தது. இந்த நிலையில், 2025 பிப்ரவரி மாதத்தில் அதனை 6.25 சதவீதமாக குறைத்தது. அதனை தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் தான் குறைந்தது 50 புள்ளிகளாவது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : ரூ.2 லட்சத்திற்கு வட்டி மட்டுமே ரூ.90,000.. அசத்தல் லாபம் தரும் அஞ்சலக டைப் டெபாசிட் திட்டம்!
அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் வீட்டு கடன், வாகன கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


