தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய திரைப்படமான 'காட் ஆஃப் வார்' படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஏற்கனவே 'தேவரா' திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து பணியாற்றிய அனிருத், அந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இந்த புதிய தகவல் உறுதியானால், ஜூனியர் என்டிஆர் அனிருத் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படமாக இது அமையும்.