மே 23 முதல் மே 28 வரை.. மொத்தம் 6 நாட்கள் வங்கிகள் செயல்படாது?
6 Days Continuous Bank Holidays | மே 25, 2026 மற்றும் மே 26, 2026 ஆகிய இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக சில பகுதிகளில் தொடர்ந்து 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் மே 25, 2026 மற்றும் மே 26, 2026 ஆகிய நாட்களில் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக சில பகுதிகளில் தொடர்ந்து 6 நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் தொடர்ந்து 6 நாட்கள் வங்கிகள் செயல்படாது என வெளியாகி வரும் தகவல்கள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் மே 25, 2026 மற்றும் மே 26, 2026 ஆகிய நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த இரண்டு நாட்கள் போராட்டம் மட்டுமன்றி அதனையொட்டி வார விடுமுறைகள் மற்றும் அரசு விடுமுறைகளும் வர உள்ளது. இதன் காரணமாக மொத்தம் 6 நாட்கள் சில பகுதிகளில் உள்ள வங்கிகள் செயல்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : மொத்த Vs தனித்தனி FD முதலீடு.. இரண்டில் எதில் முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும்?
மே மாதத்தில் மொத்தம் 6 நாட்கள் வங்கிகள் செயல்படாது?
- மே 23, 2026 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- மே 24, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- மே 27, 2026 மற்றும் மே 28, 2026 – சில பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு பக்ரீத் பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, மே 25, 2026 மற்றும் மே 26, 2026 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பு இரண்டு நாட்களும் அதனை தொடர்ந்து இரண்டு நாட்களும் விடுமுறையாக உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து 6 நாட்கள் வங்கிகள் செயல்படாது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : தங்கத்தை தொடர்ந்து வெள்ளி வாங்குவதிலும் சிக்கல்.. ட்விஸ்ட் வைத்த மத்திய அரசு!
இந்த தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகலாம். எனவே, இந்த நாட்களில் பொதுமக்கள் ஆன்லைன் பேங்கிங், மொபைல் செயலிகள், யுபிஐ, ஏடிஎம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும்.