ஆந்திராவில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலி.. மேலும் 12 பேர் சிகிச்சை!
Andhra Paresh Corona Virus Cases | ஆந்திர பிரதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 4 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமன்றி, தொற்று பாதிப்புக்கு உள்ளான 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமராவதி, ஜூலை 18 : ஆந்திர (Andhra Pradesh) மாநிலத்தில் கொரோனா (Corona) தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்ட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகையே தலைகீழாக புரட்டிப்போட்ட கொரோனா தொற்று பாதிப்பு ஆந்திராவில் மீண்டும் வேகம் எடுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆந்திரா கொரோனா தொற்று பாதிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பால் 4 பேர் பலி
ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், காக்கிநாடாவை சேர்ந்த ஒருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் ஏற்கனவே உடல்நல பாதிப்புகள் இருந்த நிலையில், இவர்கள் கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 8 பேர் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இதையும் படிங்க : இனி “வந்தே மாதரம்” பாடலை அவமதித்தால் 3 ஆண்டு ஜெயில்.. புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசு!
பொதுமக்கள் அச்சப்படாமல் இருக்க வேண்டும் என அறிவுரை
2019 ஆம் ஆண்டு சீனாவின், ஊகான் மாவட்டத்தில் தான் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று உலக நாடுகள் இடையே பரவ ஆரம்பித்த நிலையில், மிகப்பெரிய சவாலாக மாறியது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க : நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டாம்.. எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் அறிவுறுத்தல்
உலகின் அழிவிக்கு வழிவகுக்கும் வகையில் பெரிய அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் மாறியது. பின்னர் அதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு பின்பு நிலமை சீரானது. தற்போது மீண்டும் ஆந்திராவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் அச்சப்படாமல் இருக்க வேண்டும் என மருத்துவ துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.