AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரதமர் மோடியின் ‘வந்தே மாதரம்’ செய்தியுடன் விண்ணில் பாயும் விக்ரம்-1 ராக்கெட்! சிறப்புகள் என்ன?

பிரதமர் மோடி ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்காக எழுதியுள்ள இந்த சிறப்பு அஞ்சல் அட்டை, உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்த்துகள் மற்றும் நம்பிக்கைகளைத் தாங்கிச் செல்லும் நூற்றுக்கணக்கான அட்டைகளுடன் விண்வெளிக்குப் பயணிக்கிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், “ஒரு பில்லியன் கனவுகள்... இன்னும் பல வாய்ப்புகள்” என்ற தலைப்பில் ஸ்கைரூட் நிறுவனம் சிறப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் ‘வந்தே மாதரம்’ செய்தியுடன் விண்ணில் பாயும் விக்ரம்-1 ராக்கெட்! சிறப்புகள் என்ன?
விக்ரம் 1 ராக்கெட்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 18 Jul 2026 10:43 AM IST

ஜூலை 18, 2026: இந்தியாவின் தனியார் விண்வெளித் துறை புதிய வரலாற்றை படைக்க தயாராகி வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உருவாக்கியுள்ள ‘விக்ரம்-1’ ராக்கெட்,  தனது முதல் சுற்றுப்பாதை ஏவுதலை மேற்கொள்ள உள்ளது. இந்த ஏவுதலின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் கையெழுத்துடன் கூடிய ‘வந்தே மாதரம்’ என்ற சிறப்பு செய்தியும் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

பிரதமர் மோடியின் செய்தியுடன் விண்ணில் பாயும் ராக்கெட்:


‘மிஷன் ஆகமன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளிப் பயணம், காலை 11.30 மணிக்கு ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்காக எழுதியுள்ள இந்த சிறப்பு அஞ்சல் அட்டை, உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்த்துகள் மற்றும் நம்பிக்கைகளைத் தாங்கிச் செல்லும் நூற்றுக்கணக்கான அட்டைகளுடன் விண்வெளிக்குப் பயணிக்கிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், “ஒரு பில்லியன் கனவுகள்… இன்னும் பல வாய்ப்புகள்” என்ற தலைப்பில் ஸ்கைரூட் நிறுவனம் சிறப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதா.. திமுக ஆதரவை பாஜக கோரும்.. மத்திய அமைச்சர் அத்வாலே!

இந்தப் பயணத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், முன்னாள் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோரின் வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற உள்ளன.

நாட்டின் முதல் தனியார் ஏவுகணை – சிறப்புகள் என்ன:


முழுக்க முழுக்க இந்திய தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள விக்ரம்-1, நாட்டின் முதல் தனியார் முறையில் உருவாக்கப்பட்ட சுற்றுப்பாதை ஏவுவாகனமாகும். இதன் மூலம் உலகளாவிய தனியார் செயற்கைக்கோள் ஏவுதல் சந்தையில் இந்தியா முக்கிய இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நான்கு நிலைகளைக் கொண்ட ராக்கெட், விரைவான மற்றும் தேவைக்கேற்ப செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளிப் பயணம், நமது இளைஞர்களின் திறமை, உறுதி மற்றும் தொழில்முனைவு உணர்வை வெளிப்படுத்துகிறது. மேலும், விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், புதுமை மற்றும் தொழில்முனைவுக்கான புதிய வாய்ப்புகளை எவ்வாறு திறந்து விடுகின்றன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

மேலும் படிக்க: ஆந்திராவில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலி.. மேலும் 12 பேர் சிகிச்சை!

இந்தியாவின் விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவைத்த மத்திய அரசின் சீர்திருத்தங்களின் முக்கியப் பயனாளிகளில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமும் ஒன்றாகும். இஸ்ரோவின் வசதிகள் மற்றும் நிபுணத்துவத்தை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் இன்-ஸ்பேஸ் அமைப்பு உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் பல்வேறு புதிய நிறுவனங்கள் உருவாகின.

வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி:


இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று காலை 11.30 மணிக்கு, இந்தியாவின் முதல் தனியார் முறையில் உருவாக்கப்பட்ட ஏவுவாகனமான ‘விக்ரம்-1’ ராக்கெட்டின் முதல் சுற்றுப்பாதை ஏவுதலை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. நான்கு நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட், விரைவான மற்றும் தேவைக்கேற்ப ஏவுதல் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளிப் பயணம், நமது இளைஞர்களின் திறமை, உறுதி மற்றும் தொழில்முனைவு உணர்வை வெளிப்படுத்துகிறது. மேலும், விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், புதுமை மற்றும் தொழில்முனைவுக்கான புதிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

வெற்றிகரமான ஏவுதலுக்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விக்ரம்-1 ராக்கெட் உயரப் பறந்து, வரலாறு படைத்து, புதிய தலைமுறை கண்டுபிடிப்பாளர்களுக்கு உத்வேகம் அளிக்கட்டும்.

அனைத்து இந்தியர்களும், குறிப்பாக எனது இளம் நண்பர்கள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், #… என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஸ்கைரூட் குழுவினரின் வெற்றிக்காக வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Follow Us