உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டிக்குள் உருவான பனிக்கட்டி, சிவலிங்கம் போன்ற வடிவத்தில் இருந்ததாகக் கூறி, ஏராளமானோர் அந்த வீட்டுக்கு திரண்டு வந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. அந்த வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியை திறந்தபோது, அதற்குள் இயற்கையாக உருவான பனிக்கட்டி, சிவலிங்கத்தைப் போல இருப்பதை குடும்பத்தினர் கவனித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அக்கம் பக்கத்தினரிடம் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமானோர் அந்த வீட்டுக்குச் சென்று பனிக்கட்டியை பார்த்தனர். சிலர் இதை சிவபெருமானின் அருளாகக் கருதி, அங்கேயே அபிஷேகம் செய்து, ஹர ஹர மகாதேவ் என பக்தி முழக்கமிட்டனர்.