AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண்களின் பாதுகாப்பில் அதிரடி காட்டும் தமிழக அரசு.. 9,500-க்கும் மேற்பட்ட இடங்களில் சுழன்றடித்த சிங்கப்பெண் சிறப்புப் படை!

Singappen Athiradi Padai action report: தமிழக அரசின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கடந்த ஜூலை 10 முதல் 16 வரையிலான 6 நாட்களில் மட்டும் 390 புகார்களுக்கு உடனடித் தீர்வு கண்டு அசத்தியுள்ளது. மேலும், மாயமான 9 பெண்கள், 9 குழந்தைகளை மீட்டதுடன், 8 குழந்தை திருமணங்களையும் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தித் தமிழக காவல்துறை சாதனை படைத்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பில் அதிரடி காட்டும் தமிழக அரசு.. 9,500-க்கும் மேற்பட்ட இடங்களில் சுழன்றடித்த சிங்கப்பெண் சிறப்புப் படை!
சிங்கப்பெண் அதிரடிப்படை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Jul 2026 07:34 AM IST

சென்னை, ஜூலை 19: தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் மற்றும் உறுதி செய்யும் நோக்கில் தமிழக அரசால் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வரும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அண்மைக் காலமாகக் களத்தில் மிகத் தீவிரமான பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 10-ஆம் தேதி முதல் ஜூலை 16-ஆம் தேதி வரையிலான வெறும் 6 நாட்களில் இந்த அதிரடிப்படை செய்துள்ள சாதனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை அரசு மற்றும் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.. சிவகங்கையில் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரிகள்!

சிங்கப்பெண் படை படைத்த சாதனைகள்:

குறுகிய காலத்திற்குள் தமிழகம் முழுவதும் இக்காவல் படை நடத்திய அதிரடி நடவடிக்கைகள் பின்வருமாறு, 390 புகார்களுக்கு உடனடித் தீர்வு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பெறப்பட்ட 390 புகார்களுக்கு, சிங்கப்பெண் அதிரடிப்படையினர் நேரடியாகச் சம்பவ இடத்திற்கே சென்று உடனடித் தீர்வு கண்டுள்ளனர். இந்த அதிரடி சோதனைகளின் போது சட்ட மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது 29 கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காணாமல் போனவர்கள் மீட்பு:

கடந்த 6 நாட்களில் மட்டும் மாயமாகித் தேடப்பட்டு வந்த 9 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சமூக விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் நலனிலும் இந்த அதிரடிப்படை மிக முக்கியப் பங்காற்றியுள்ளது:

8 குழந்தை திருமணங்கள் தடுப்பு:

உரிய நேரத்தில் தகவல் பெற்று விரைந்து செயல்பட்டதன் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தவிருந்த 8 குழந்தை திருமணங்கள் இந்த அதிரடிப்படையால் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வறுமை அல்லது இதர காரணங்களால் பள்ளிக் கல்வியைப் பாதியிலேயே நிறுத்திய 44 குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்கள் மீண்டும் தங்களது படிப்பைத் தொடரும் வகையில் பள்ளிகளில் சேர்க்க அதிரடிப்படை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் படிக்க : தமிழக அமைச்சர்களுடன் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் சந்திப்பு? நித்தியானந்தா வெளியிட்ட பதிவால் வெடித்தது சர்ச்சை!

தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகள்:

9,500+ இடங்களில் ரோந்துப் பணி: தமிழகம் முழுவதும் பெண்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என மொத்தம் 9,572 இடங்களில் சிங்கப்பெண் படையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். பொதுமக்கள் மட்டுமன்றி, தமிழகத்தில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியிலும் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 371 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

Follow Us